சந்த் பாவ்டி எனும் இந்த குளம் அலி அடில் ஷா’வால் 1557ல் கட்டப்பட்டுள்ளது. பீஜாபூரின் கிழக்கு எல்லையில் இது அமைந்துள்ளது. இதை கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதாக தெரிகிறது.
விஜயநகர சாம்ராஜ்யத்தின் அழிவுக்குபின்னர் இந்த பீஜாப்பூரில் புதிய குடியிருப்புகள் உருவாகின. அக்காலத்தில் இந்த ஏரி பீஜாப்பூரின் ஒட்டுமொத்த நீர்த்தேவையையும் பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாக விளங்கியுள்ளது. 20 மில்லியன் லிட்டர் நீரை தேக்கும் அளவுக்கு இதன் கொள்ளளவு உள்ளது
பின்னாளில் இப்பகுதியில் வெட்டப்பட்ட எல்லா குளங்களுக்கும் இதன் வடிவமைப்பு ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளது. இதன் அருகிலேயே ஒரு மண்டப வளாகமும் கட்டப்பட்டு ராஜ குடும்பத்தினரின் பிரத்யேக உபயோகத்துக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அலி அடில் ஷா இந்த குளத்திற்கு தன் மனைவியின் பெயரான சந்த் பீவி எனும் பெயரை இட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.



Click it and Unblock the Notifications