கர்மளா கிராமம் அதையொட்டி அமைந்த பார்ஷி மற்றும் மங்கள்வேதா பகுதிகளுடன் சேர்ந்து பல ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட கோயில்களை கொண்டுள்ளது. இந்த மூன்று ஸ்தலங்களிலும் பல யோகிகள் வாழ்ந்திருந்த காரணத்தால் இவை பிரசித்தி பெற்று விளங்குகின்றன.
கர்மளாவிலுள்ள கோயில் வடிவமைப்பு ஒரு ஒப்பற்ற தன்மையுடன் காணப்படுகிறது. இங்குள்ள ஒரு கோயில் 96 என்ற எண்ணை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது 96 தூண்களுடனும் 96 படங்களுடனும் 96 படிக்கட்டுகளுடனும் காணப்படுகிறது.
இங்குள்ள கமலா பவானி எனும் கோயிலுக்காகவே கர்மளா பிரசித்தி பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது. 1727ல் ராவ் ராஜே நிம்பல்கர் என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் கமலாதேவி தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலும் ஹேமந்த்பந்தி முறையில் கட்டப்பட்டுள்ளது.
இங்குள்ள அம்மனின் அருளைப்பெறுவதற்காக நவராத்திரி மற்றும் கார்த்திகை பூர்ணிமா திருவிழாக்களின்போது பெருமளவில் பக்தர்கள் இங்கு திரள்கின்றனர்.