சோலாபூரிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நால்துர்க் ஒரு பிரசித்தி பெற்ற வரலாற்று ஸ்தலம் ஆகும். மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒஸ்மானபாத் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது.
முன்னர் ஏரல் கோட்டை என்று அழைக்கப்பட்ட இந்த கோட்டை முகலாய மன்னர்கள் வசம் வருவதற்கு முன்பு பாமனி சுல்தான்களுக்கு சொந்தமாக இருந்துள்ளது.இந்த நால்துர்க் கோட்டையானது அதில் அமைந்துள்ள நார் மற்றும் மடி என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. உள்ளூர் மொழியில் அவற்றுக்கு ஆண் என்றும் பெண் என்றும் பொருள்.
மழைக்காலத்திலும் அதற்கு பின்பும் இந்த நீர் வீழ்ச்சிகள் நிரம்பி வழிவதால் அழகான மலைகளில் சரிந்து விழும் அழகு அவற்றின் காண்பதற்கு கண் கொள்ளா காட்சியாக விளங்குகிறது.
இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் இந்த கோட்டையை சுற்றிப்பார்ப்பதே ஒரு அற்புத அனுபவமாகும். மஹாராஷ்டிர மாநிலத்தில் காணப்படும் மற்ற எந்த கோட்டைகளிலும் இல்லாத அளவுக்கு இதில் புதுமையான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications