Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோனிபட் » ஈர்க்கும் இடங்கள் » க்வாஜா கிஸ்ர் கல்லறை

க்வாஜா கிஸ்ர் கல்லறை, சோனிபட்

9

க்வாஜா கிஸ்ர் இப்ராகிம் லோதி ஆட்சி காலத்தில் வாழ்ந்த ஒரு சூஃபி துறவியின் கல்லறையாகும். இந்தக்  கல்லறை அவரது இறப்புக்கு பிறகு அவரது தெய்வீக தன்மையை பாதுகாக்கும் பொருட்டு கி.பி. 1522 முதல் 1524 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டது. கல்லறையில் உள்ள கல்வெட்டு, இந்தத் துறவி தர்யா கான் ஸர்வானியின் மகன் என்று குறிப்பிடுகிறது.

க்வாஜா கிஸ்ர் கல்லறை ஓடைக்கல் தொகுதிகள் மற்றும் சிவப்பு மணற்கற்கல் கொண்டு  கட்டப்பட்டுள்ள சில அரிய நினைவுச்சின்னங்களில்  ஒன்றாகும். அது ஒரு உயர்ந்த மேடையில் மீது அமைத்துள்ளது. மேலும் அதன் நான்கு மூலைகளும் சதுர நீட்சிகள் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லறையின்  மத்திய பத்தியின் இறுதியில் இரண்டு வில்வளைவுகள் உள்ளன. அந்த இரண்டு வில் வளைவுகளும் இந்தக் கல்லறையின் நுழைவாயில்களாக விளங்குகின்றன.

வில் வளைவுகளில் இருந்து தொடங்கும் படிகள் கல்லறையில் முடிவடைகிறது. கல்லறையின் வெளிப்புறம் தாமரை, மலர் வடிவமைப்பு மற்றும் வில்வளைவுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மசூதியின் மேற்கூரை ஒன்றாக சாயல்களை உடைய ஒரு சிக்கலான வண்ண அமைப்பாக  உருவாக்கப்பட்டுள்ளது. மேலும்  இது மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு நிறங்களை தாங்கி பூக்களின் வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லறை அல்லது நினைவுச் சின்னம் ஒரு அரை வட்ட வடிவிலான கல்லறை வடிவத்தில் உள்ளது. அந்தக் கல்லறையனது குறைந்த உயரம் உடைய டிரம்ஸ் வரன்முறையின் மேழ் ஒரு தலைகீழ் தாமரை மலர் மீது நிறுவப்பட்ட ஒரு கூரையின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.

கல்லறையை சுற்றி சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவிற்கு பச்சைப்பசேலென  தோட்டங்கள் உள்ளன. இந்த கல்லறையை  இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (ASI) ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed