இந்த மடாலயம் கடல் மட்டத்திலிருந்து 3870 மீ உயரத்தில் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் ஸ்பிதி பள்ளத்தாக்கு ராஜ்ஜியத்தின் தலைநகரமாக தங்கர் திகழ்ந்துள்ளது. ஒரு மலையின் உச்சியில் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வசதியாக இந்த மடாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில் அக்காலத்தில் அண்டை ராஜ்ஜியங்களின் தொடர்ந்த தாக்குதல்களுக்கு ஸ்பிதி ராஜ்ஜியம் உள்ளாகியிருந்தது. பல அடுக்கு மாளிகைகள் தொகுப்பாக அமைக்கப்பட்டு ஒரு கோட்டை போன்ற தோற்றத்துடன் இந்த மடாலயம் காட்சியளிக்கிறது.
இங்குள்ள ஐந்து கூடங்களில் லக்காங், கஞ்சூர் மற்றும் துக்காங் ஆகிய மூன்று கூடங்கள் முக்கியமானவை ஆகும். இந்த மடாலயத்தில் பயணிகள் வஜ்ரதாராவின் தத்ரூபச்சிலையை தரிசிக்கலாம்.
ஒரு கண்ணாடி பீடத்தின் மீது ஒன்றன் பின் ஒன்றாக எதிரெதிர் திசையை நோக்கியவாறு உள்ள நான்கு புத்தர் சிலைகளைக்கொண்ட அமைப்பும் இங்கு காணப்படுகிறது.
இங்கு பயணிகள் தங்குவதற்கான எந்த தங்குமிட வசதிகளும் இல்லை என்பதால் சுற்றுலாப்பயணிகள் கூடார அமைப்புகள் மற்றும் ஸ்லீப்பிம் பேக் எனப்படும் சிறு கூடார சாதனங்களோடு பயணம் மேற்கொள்வது அவசியம்.



Click it and Unblock the Notifications