கீ கொம்பா என்றழைக்கப்படும் கீ மடாலயம் கடல் மட்டத்திலிருந்து 4116மீ உயரத்தில், காஸாவிலிருந்து 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. காஸா நகரம் ஸ்பிதி மண்டலத்தின் தலைநகராகும்.
இந்த மடாலயம் ஒழுங்கற்ற அமைப்புடன், உயரம் குறைந்த அறைகளையும், குறுகலான நடைக்கூடங்களையும் கொண்டதாக காட்சியளிக்கிறது. இதில் உள்ள பிரார்த்தனை அறைகள் ஒழுங்கற்ற அமைப்புடன் குறுகலான பாதைகள், வளைந்து செல்லும் படிக்கட்டுகள் மற்றும் சிறிய கதவுகளை கொண்டதாக காணப்படுகின்றன.
பஸாதா எனும் கட்டிடக்கலை பாணியில் இந்த மடாலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சுவரோவியங்கள், தங்கா ஓவியங்கள், அரிய எழுத்துப்பிரதிகள், ஸ்டுக்கோ படங்கள் மற்றும் காற்று வாத்தியக்கருவிகள் போன்றவை இந்த மடாலயத்தின் விசேஷமான அம்சங்களாகும். பலவிதமான ஆயுதங்களின் சேகரிப்பையும் இந்த மடாலயம் கொண்டிருப்பது ஒரு சுவாரசியமான அம்சமாகும்.
கொள்ளைக்காரர்களை சமாளிக்க இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், நூற்றுக்கணக்கான லாமாக்கள் (மதகுருக்கள்) இங்கு ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டிருப்பது இதன் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று.



Click it and Unblock the Notifications