Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீநகர் » ஈர்க்கும் இடங்கள் » பட்காம்

பட்காம், ஸ்ரீநகர்

137

ஸ்ரீ நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ள இடம் பட்காம் மாவட்டம். முன்னதாக ஸ்ரீ நகரின் ஒரு பகுதியாகவே இருந்த பட்காம், 1979-ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிந்தது.

நீரோடைகளுக்காகவும் மற்றும் மலைச் சிகரங்களுக்காகவும் மிகவும் புகழ் பெற்று விளங்கும் இடம் இந்த பகுதியாகும். பெஹ்ஜன், தூத்பாதர், சாங்-இ-சபேட் அல்லது ஒயிட் ராக்ஸ், நக்வேர் பல் மற்றும் யோவ்மார்க் ஆகியவை இந்த பகுதியிலுள்ள முக்கியமான மலைச் சிகரங்களாகும். தட்டகுட்டி மலை அல்லது தூத் கங்கா, சுத் ஹரன், நில் நாக், கண்டக் நாக், சுக் நாக், நர நாக் மற்றும் புஷ்கர் நாக் ஆகியவை இங்கிருக்கும் பிரபலமான நீரோடைகளாகும்.

தெற்கில் புல்வாமா, வடக்கில் ஸ்ரீ நகர் மற்றும் தென்-மேற்கில் பாரமுல்லா மற்றும் பூன்ச் ஆகிய இடங்கள் பட்காம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள இடங்களாகும். காக் மற்றும் டோசாமைதான் ஆகியவை பட்காமிலுள் பிற சுற்றுலா தலங்களாகும். மலையடிவாரங்களில் உள்ள கண்கவரும் சிறு கிராமங்களைக் காண்பதற்காகவே பட்காமிற்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் படையெடுப்பது வழக்கம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 May,Fri
Return On
30 May,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 May,Fri
Check Out
30 May,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 May,Fri
Return On
30 May,Sat