Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீநகர் » ஈர்க்கும் இடங்கள் » பர்ஸாஹோம்

பர்ஸாஹோம், ஸ்ரீநகர்

137

காஷ்மீரின் முக்கியமான வரலாற்று மற்றும் தொல்பொருள் தலமான பர்ஸாஹோம், ஸ்ரீ நகரின் புகழ் பெற்ற ஷாலிமார் தோட்டத்திற்கு வட-மேற்கில் அமைந்துள்ளது. கி.மு.3000 முதல் கி.மு.1500-ம் ஆண்டுகளில் இந்த இடத்தில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழமையான வீடுகள் பாதியளவு-சமதளப்பரப்பை கொண்டுள்ள பள்ளங்களை கொண்டுள்ளதாகவும், தரையில் முழுமையாக தோண்டப்படாமலும் வைக்கப்பட்டுள்ளன. கி.மு.2000 ஆண்டுகளில், இங்கிருந்த வீடுகள் களிமண்-செங்கற்களை தரைக்கு மேல் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன.

பர்ஸாஹோம் என்ற வார்த்தைக்கு உள்ளூர் மொழியில் 'பூச்ச மரங்களின் இடம்' என்று அர்த்தமாகும். ஏனெனில், இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடந்த போது கணக்கிலங்காத அளவுகளில் எரியூட்டப்பட்ட பூச்ச மரங்கள் கண்டறியப்பட்டன. இதன் மூலம், புதிய கற்காலத்தில் பெருமளவிலான பூச்ச மரங்கள் இங்கு வளர்க்கப்பட்டன என்பதை அறிய முடிகிறது.

1961 முதல் 1968-வரையிலும் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. புதிய-பெரிய கற்காலம், புதிய கற்காலம் மற்றும் வேறு சில வரலாற்று காலகட்டங்களைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் இந்த இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

பானைகள், அம்புக்கூடுகள், விலங்குகளின் எலும்புகள் மற்றும் கற்கால கருவிகள் ஆகியவை இந்த இடத்தில் கண்டறியப்பட்ட முக்கியமான தொல்பொருட்களாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
13 Jun,Sat
Return On
14 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
13 Jun,Sat
Check Out
14 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
13 Jun,Sat
Return On
14 Jun,Sun