ஸ்ரீ நகரில் உள்ள புகழ் பெற்ற தோட்டங்களில் மிகவும் இளமையான, புதிய தோட்டம் சினார் தோட்டமாகும். சமீபத்தில் தான் சுற்றுலாத் துறையினர் 3 கோடி ரூபாய் செலவில் இந்த தோட்டத்தைக் கட்டியுள்ளனர்.
போய்னே தோட்டம் அல்லது சினார் பாரம்பரிய பூங்காத் தோட்டம் என்றும் அழைக்கப்படும் இந்த தோட்டத்தைக் கட்டியதன் காரணம், காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காஷ்மீரின் பாரம்பரியத்தை உணர்த்துவதே ஆகும்.
இந்த பூங்காவில் உள்ள மூன்று தீவுகளில் சுழல்கள், குடில்கள் மற்றும் இசைபாடும் நீரூற்றுகள் ஆகியவை உள்ளன. மாலை வேளைகளில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்காக இந்த பூங்காவிற்குள்ளேயே இருக்கும் திறந்தவெளி அரங்கம் மற்றுமொரு ஆர்வமூட்டக்மூடிய இடமாகும்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக நடத்தப்படும் மீன் பிடித்தல், கேம்ப் பையர் மற்றும் நீச்சல் போட்டிகளிலும் அவர்கள் கலந்து கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications