Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீநகர் » ஈர்க்கும் இடங்கள் » டச்சிகாம் வனவிலங்கு சரணாலயம்

டச்சிகாம் வனவிலங்கு சரணாலயம், ஸ்ரீநகர்

137

ஸ்ரீ நகரிலுள்ள டச்சிகாம் வனவிலங்கு சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 5500 அடியிலிருந்து, அதிக பட்டசமாக 14500 அடிவரையிலான மாறுபட்ட உயரங்களில் பரந்து விரிந்திருக்கும் சரணாலயமாகும்.

இந்த சரணாலயம் 1951-ம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 141 ச.கிமீ-க்கு பரந்து விரிந்திருக்கும் இந்த சரணாலயம், அழியும் உயிரினங்களில் ஒன்றான ஹங்குல் என்ற சிவப்பு மான்களை உடைய ஒரே சரணாலயமாகும்.

மேலும், பார்வையாளர்கள் கருப்பு கரடிகள், சிறுத்தைப்புலிகள், கஸ்தூரி மான்கள் மறறும் இடம் பெயரும் பறவைகளையும் காணும் வாய்ப்புகளைக் கொண்டதாக இச்சரணாலயம் விளங்குகிறது.

இந்த சரணாலயம் மேல் டச்சிகாம் மற்றும் கீழ் டச்சிகாம் என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் ஊசியிலைக் காடுகள், பரந்த புல்வெளிகள், பெரிய இலைகளை கொண்ட மரங்கள் மற்றும் மழைக்கால காடுகள் என பல்வகைப்பட்ட தாவரங்களை கொண்டுள்ளது.

இமாலாய க்ரிஃப்பன், இமாலய மரநாய், மஞ்சள் தொண்டையுடைய சிட்டுக்குருவிகள், நீள வாலுடன் கூடிய நீல நிற ஐரோப்பிய புறாவான ஃப்ளூ மக்பி, மலை நரி மற்றும் குள்ளநரி ஆகியவற்றை காத்து நிற்கும் இல்லமாக இந்த சரணாலயம் உள்ளது.

ப்ளட் பீஸண்ட், தாடியுடைய கழுகுகள், தங்கக் கழுகு மற்றும் கிரிம்ஸன் டாபோகன் ஆகிய அரிய வகை பறவையினங்களின் அமைவிடமாகவும் இந்த சரணாலயம் உள்ளது.

வருடம் முழுவதும் திறந்திருக்கும் டச்சிகாம் சரணாலயத்திற்குள் செல்ல தலைமை வனவிலங்கு காவலரிடன் அனுமதியைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இந்த தேசிய பூங்கா காலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரையிலும் தினந்தோறும் திறந்திருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu