கி.பி.1400-ம் ஆண்டு கட்ட்டப்பட்ட ஜாமா மசூதி ஸ்ரீ நகரிலேயே மிகவும் பழமையான மசூதிகளில் ஒன்றாகும். இந்த பழமையான மசூதி வெள்ளிக்கிழமை மசூதி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு காலகட்டங்களிலும், பலராலும் அழிக்கப்பட்டும், புனரமைப்பு செய்யப்பட்டும் வந்துள்ளது இந்த மசூதியை கடைசியாக புனரமைப்பு செய்தவர் மஹாராஜா பிரதாப் சிங் ஆவார்.
இந்த மசூதியின் வடிவமைப்பில் இஸ்லாமிய வடிவமைப்புகளையும், இந்திய பொருட்களையும் ஒரே கலவையில் பார்க்க இயலும். ஆங்கிலேயர்களால் வளர்தெடுக்கப்பட்ட இந்தோ-சார்செனின் கட்டிடக்கலையின் விளைவாகவே, இஸ்லாமிய கட்டிடங்களில் வழக்கமாக காணப்படும் வட்ட வடிவமான விதானங்கள் இல்லாத மசூதியாக இது உள்ளது.
இந்த மசூதியின் முதன்மையான கவர்ச்சி அம்சமாக, தியோதர் மரக் கழிகளாலான 370 தூண்களின் தாங்கு திறனில் நின்று கொண்டிருக்கும் பிரார்த்தனைக் கூடம் உள்ளது.
இந்த மசூதிக்குள் இருக்கும் அமைதியும், வெளியில் இருக்கும் ஆரவாராமான சந்தையின் சத்தமும் இங்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒன்றுக்கொன்று மிகவும் முரண்பட்ட விஷயங்களாக தெரியும். மிகவும் பெரிய இடவசதி உள்ள ஜாமா மசூதியில் ஒரே சமயத்தில் 30,000 பேர் இருக்க முடியும்.



Click it and Unblock the Notifications