அகுந்த் முல்லா மசூதி அல்லது அகூன் முல்லா என்றழைக்கப்படும் மசூதியானது, ஷா ஜகானின் புதல்வாரன தாரா ஷிகோவினால் மஹ்தூப் சாஹிப் தலத்திற்கு கீழாக கட்டப்பட்டுள்ளது.
தாரா ஷிகோ இந்த மசூதியை தனது குருநாதர் அகுன் முல்லா ஷா-வின் நினைவாக கட்டினார். இந்த வழுவழுப்பான சாம்பல் நிறத்தினாலான சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மசூதி, ஒரு மசூதிக்குள் இன்னொன்றை உள்ளடக்கியதாக உள்ளது. இதன் உள் மையத்திலிருக்கும் மசூதி முழுமையான ஒரு தனி அமைப்பாக நடைபாதை மண்டபங்களால் சூழப்பட்டிருக்கிறது.
இந்த மசூதியின் வியக்கத்தக்க மற்றும் அதிஅற்புதமான அம்சமாக அதன் மேடையில் வைக்கப்பட்டுள்ள கல்லினாலான தாமரை சிற்பம் உள்ளது. இந்த கற்தாமரையில், 1649-ம் ஆண்டைச் சேர்ந்த எழுத்துருக்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும், இந்த மசூதியில் உள்ள சிறப்பு பிரார்த்தனைக் கூடம் பார்வையாளர்களைக் கவருவதாக உள்ளது.



Click it and Unblock the Notifications