சாட்டி பத்ஷாஹி குருத்துவாரா அமைந்துள்ள ரெயின்வாரி சீக்கியர்களுக்காக ஸ்ரீ நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா தலமாகும். முதனமையான சுற்றுலா தலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த குருத்துவாரா எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இடமாகவும் உள்ளது.
சீக்கியர்களின் 6-ம் குருவான குரு ஹர்கோபிந்த் சிங்கினால் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த தலத்திற்கு பெருமளவிலான பக்தர்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்வார்கள்.
குரு ஹர்கோபிந்த் சிங் காஷ்மீர் மாநிலம் முழுமையும் சுற்றுப் பயணம் செய்ததாகவும், அவர் உபதேசம் செய்த இடங்களில் குருத்துவாராக்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்றாகவே ஸ்ரீ நகரில் உள்ள சாட்டி பட்ஷாஹி குருத்துவாரா உள்ளது.
ஹரி பர்பத் கோட்டை அல்லது முகலாய கோட்டை என்று அழைக்கப்படும் கோட்டையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த குருத்துவாரா சீக்கிய மக்களின் முக்கியமான தலங்களில் ஒன்றாகும்.
மேலும், இம்மாநிலத்தில் உள்ள குருத்துவாராக்களிலேயே மிகவும் முக்கியமான இடமாக இந்த குருத்துவாரா உள்ளது. எல்லாப் பகுதிகளிலும் மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த குருத்துவாரா, வருடம் முழுவதுமே மகிழ்ச்சிகரமான மற்றும் குளுமையான சூழலை கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications