ஸ்ரீ நகரின் கான்யார் மாவட்டத்தில் உள்ள ரோஸாபல் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என இரு தரப்பினருமே தங்களுடையது என உரிமை கொண்டாடும் பிரச்னைக்குரிய புனிதத்தலமாகும்.
முஸ்லிம்கள் தங்கள் மத துறவியான யூஸ் ஆசப்-ன் கல்லறை இந்த தலம் என்றும், கிறித்தவர்கள் இயேசு கிறிஸ்து இங்கே புதைக்கப்பட்டிருப்பதாகவும் உரிமை கொண்டாடி வருகின்றனர். ஜியாரதி ஹஸ்ரதி யூவ்ஸா அசௌப் என்ற பெயரிலும் இந்த தலம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது!
கிறித்தவ மதத்தின் தூதரான இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த போது, காயங்களுடன் தப்பிய அவர் இங்கு வந்ததாகவும், பின்னர் யூத முறைப்படி இவ்விடத்தில் புதைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
எனினும், இந்த ஊரைச் சேர்ந்தவரான மீர் சய்யீது நசீருத்தின் என்ற உள்ளூர் முஸ்லிம் துறவியை இஸ்லாமிய வழக்கப்படடி இவ்விடத்தில் புதைத்துள்ளார்கள் என உள்ளூர்வாசிகள் நம்பி வருகின்றனர். சன்னி முஸ்லிம்களை கொண்ட இயக்குநர்கள் குழு தற்போது இந்த புனிதத்தலத்தின் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.



Click it and Unblock the Notifications