ஜீலம் நதிக்கரையில் 1898-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இடம் தான் ஸ்ரீ பிரதாப் சிங் (SPS) அருங்காட்சியகமாகும். 'தோஷ் கானா' அல்லது கருவூலத்திலிருந்து எடுக்கப்பட்ட சால்வைகள் மற்றும் போர்த்தளவாடங்களை காட்சிப்படுத்தி வைக்கப்பட்ட இடமாகவே இந்த அருங்காட்சியகம் இருந்தது.
இந்த அருங்காட்சியகத்தில் பரிஹஸ்போரா, அவந்திபூரா மற்றும் பன்டெரென்தான் ஆகிய இடங்களிலிருந்து அகழ்வு செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
உஸ்குர் என்ற பௌத்த தலத்திலிருந்து, கண்டறியப்பட்ட கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மதிப்புமிக்க, பழங்கால மட்பாண்ட தலைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. 4-வது மற்றும் 5-வது நூற்றாண்டைச் சேர்ந்த மட்பாண்ட வார்ப்புகளும் இங்கு உள்ளன.
லோகேஷ்வரா என்ற வெண்கலத்தாலான புத்தர் தியானம் செய்வது போன்ற ஒரு பழமையான சிலையும் மற்றும் இந்து புராணத்தில் வரும் கருடர் என்ற பெரிய பறவையின் மீது அமாந்திருக்கும் இந்து கடவுளான மகா விஷ்ணுவின் பச்சை நிற சிலையொன்றும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பார்வையைக் கவரும் இடங்களாகும். 5-ம் நூற்றண்டைச் சேர்ந்த தாமிர புத்தர் சிலையொன்றும், காந்தாரக்கலையின் சான்றாக இந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள் மிகவும் கவனத்துடன் காலம், பாணி மற்றும் பொருட்களைப் பொறுத்து குறித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்தின் கலைப்பொருட்கள,; நாணயவியல் மற்றும் ஓலைச்சுவடிகள், மினியேச்சர் ஓவியங்கள், ஆயுதங்கள் மற்றும் பாத்திரங்கள், புல் மற்றும் வில்லோ மர வேலைப்பாடுகள், மேஜை நாற்காலிகள் மற்றும் அலங்கார பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
மேலும், ஜவுளிகள் மற்றும் விரிப்புகள்; தோல் பொருட்கள், சிற்பங்கள், டைல்ஸ் மற்றும் காஷ்மீரின் பல்வேறு இடங்களிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட தொல்பொருட்கள்; இயற்கை மற்றும் வரலாறு சார்ந்த பதப்படுத்தப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் ஆகியவையும் இந்த மியூசியத்தில் உள்ளன.



Click it and Unblock the Notifications