சுற்றுலாப்பயணிகள் சிருங்கேரியில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய மற்றொன்று சப்பர ஆஞ்சநேய ஆலயமாகும். ஹனுமானுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் பிரமாண்ட கருங்கல் ஹனுமான் சிலை காணப்படுகிறது. சிவபெருமான் மற்றும் நாகக்கடவுள் சிலைகளும் இந்த ஆலயத்தினுள் காணப்படுகின்றன.சப்பரம் என்றால் குடை அதாவது பாதுகாப்புக்கானது, அப்படி குடை போன்ற இருப்பிடத்துக்கான அருளை இங்குள்ள சப்பர ஆஞ்சனேயர் வழங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை. ஆலயத்தில் பிரசாதமாக எலுமிச்சையும், வெற்றிலையும் வழங்கப்படுகின்றன. கோயிலைச்சுற்றிலும் அழகிய சூழல் காட்சிக்கு உகந்ததாக இங்கு காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications