சிருங்கேரியின் பிரதான அம்சம் இது என்பதால் சுற்றுலாப் பயணிகள் இதை தவறவிட முடியாது. ஹிந்து அத்வைத மரபின் மடமாக கருதப்படுவதும் தட்சணமான்ய சிருங்கேரி சாரதா பீடம் என்று அழைக்கபடும் சிருங்கேரி மடம் ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட பெருமை கொண்டதாகும். இங்கு கர்ப்பகிருகமானது ஒரு வட்டவடிவ மேடையின்மீது அமைக்கப்பட்டுள்ளது.துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த மடம் யஜூர் வேத மரபின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹொய்சல மற்றும் திராவிட கட்டிடக் கலை மரபினை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் இந்த மட்த்தில் வித்யாதீர்த்த லிங்கம் மற்றும் 12 கிரக ராசிகளை குறிக்கும் தூண்கள் போன்றவற்றைக்காணலாம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரம மாக சூரிய வெளிச்சம் ஒவ்வொரு தூணிலும் விழும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications