Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீரங்கப்பட்டணா » ஈர்க்கும் இடங்கள் » ஜமா மஸ்ஜித்

ஜமா மஸ்ஜித், ஸ்ரீரங்கப்பட்டணா

33

மஸ்ஜித்-இ-அலா என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த மசூதி ஸ்ரீரங்கப்பட்டணாவில் அவசியம் பார்க்க வேண்டிய வரலாற்றுச்சின்னமாகும். இந்த மசூதி 1784ல் திப்பு சுல்தானால் அவர் மைசூரைக் கைப்பற்றியபிறகு கட்டப்பட்டுள்ளது.

இந்த மசூதியின் முதல் ‘இமாமத்’ (தொழுகை வசன உச்சாடனம்) திப்பு சுல்தான் மூலமே செய்விக்கப்பட்டது என்பதாக நம்பப்படுகிறது.

இந்த வரலாற்றுச்சின்னமான மசூதி திப்பு சுல்தானுக்கு மிகப்பிடித்த இடமாக விளங்கியுள்ளது. இரண்டு அடுக்குகளால் ஆன இந்த மசூதி வழக்கத்திற்கு மாறாக அளவில் சிறியதான குமிழ்கோபுரத்தையும், இதர துணைக்கோபுரங்களையும், இரண்டு தூண்கோபுரங்களையும் கொண்டுள்ளது.

97 வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கடிகாரத்தையும் இந்த மஸ்ஜித் கொண்டுள்ளது. இதன் வடபகுதியில் உள்ள பரந்த கூடம் தொழுகை அரங்கையும்,  மற்றும்‘மி(ஹ்)ராப்’ (புனித மெக்கா இருக்கும் திசையை காட்டும் அமைப்பு) மாடத்தையும் கொண்டுள்ளது.உயர்த்தப்பட்ட தரைத்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள இந்த மசூதியின் முன்பகுதி திறந்த வெளியாக காணப்படுகிறது.

தூண்கோபுரங்களின் மீது எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள மாடங்களில் புறக்களுக்கான துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200 படிகளை ஏறிச்சென்று இந்த மினாரெட்களின் (தூண் கோபுரம்) உச்சியிலிருந்து பார்த்தால் அருகிலுள்ள பிரதேசங்களின் அற்புதமான வான் தரிசனம் கிடைக்கிறது.

மறைந்த அப்துல் ஹஃபீஸ் ஜுனைடி இந்த மசூதியில் கடந்த 50 வருடங்களாக தொழுகைப்பணியில் ஈடுபட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. பயணிகள் இங்கு அல்லாவின் 99 புனிதப்பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மதரஸா எனும் இஸ்லாமிய ஆன்மீகப்பள்ளி இங்கு மசூதி வளாகத்தில் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed