Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தடியாண்டமோல் » ஈர்க்கும் இடங்கள் » பாடி இக்குதப்பா கோயில்

பாடி இக்குதப்பா கோயில், தடியாண்டமோல்

11

இக்குதப்பா எனும் தெய்வத்துக்காக அமைந்துள்ள இந்த பாடி இக்குதப்பா கோயில் கூர்க் பிரதேசத்தில் கக்கபே பகுதியில் வசிக்கும் கொடவா இனத்தாரின் பழமையான கோயிலாகும்.

லிங்கராஜேந்திரா மன்னரால் 1810 ம் ஆண்டு இந்த கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த இக்குதப்பா இந்த பிரதேசத்தின் மழைக்கடவுளாகவும் வணங்கப்படுகிறது. மழை வேண்டி இங்குள்ள விவசாயிகள் இக்குத்தப்பா கடவுளுக்கு காணிக்கைகள் வழங்கி பூஜிக்கின்றனர்.

துலாபார காணிக்கை முறையும் இந்த கோயிலில் பின்பற்றப்படுகிறது. அதாவது பக்தரின் எடைக்கு எடை தேங்காய்கள், பழங்கள், அரிசி போன்ற நிவேதனப்பொருட்கள் காணிக்கையாய் இந்த கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.இங்குள்ள மக்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக இந்த கோயில் விளங்குகிறது. மார்ச் மாதத்தின்போது வருடாந்திர திருவிழாவான கலியார்ச்சி கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவில் இக்குதப்பா தெய்வச்சிலை ஊர்வலமாக மல்லம்மா பெட்டா மலை கொண்டு செல்லப்பட்டு திருப்பி எடுத்துவரப்படுகிறது. பல்வேறு பாரம்பரிய நடனங்கள், இசை என்று இந்த ஊர்வலத்தை தொடர்ந்து நடைபெறுகின்றன. தடியண்டமோல் மலைஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் அவசியம் இந்த பாடி இக்குதப்பா கோயிலை தரிசிக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Jul,Sat
Check Out
12 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun