டப்போலாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த தொன்மையான கோட்டைகளாய் வஸோட்டா மற்றும் ஜெய்காட் கோட்டைகள் அறியப்படுகின்றன. ஒரு காலத்தில் அசைக்கமுடியாத கோட்டைகளாய் இருந்த இவை இரண்டும் இன்று கவனிப்பாரற்று கிடக்கிறது.
வஸோட்டா கோட்டை சிவசாகர் ஏரிக்கருகில், கொய்னா வனவிலங்கு சரணாலயத்தின் பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டை ஷிலஹர் சாம்ராஜ்யத்தின் இரண்டாம் போஜ்ராஜ் மன்னரால் கட்டப்பட்டது.
அதன் பின்னர் இது சிவாஜி மகாராஜாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. முன்னர் வியாக்ரகாட் கோட்டை என்று அழைக்கப்பட்ட இது ஜுன வஸோட்டா, நவீன் வஸோட்டா மற்றும் நாகேஷ்வர் என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வஸோட்டா கோட்டை ஆபத்தான செங்குத்துப் பாறைகளுக்கும், கிறுகிறுக்கும் மலைச் சிகரங்களுக்கும் உறைவிடமாய் திகழ்ந்து வருகிறது. எனவே இந்த இடம் சாகசப் பிரியர்களுக்கு பல சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை கொடுப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஆகையால் இங்கு நடைபயணம் செல்ல விரும்புவோர் ஒளிந்திருக்கும் அபாயத்தை மனதில் வைத்து செயல்படுவது முக்கியம்.



Click it and Unblock the Notifications