சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவில் தேஜ்பூரின் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமாக விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய சிவலிங்கங்களும் ஒன்றை கொண்டிருக்கும் இக்கோவில் ஆச்சரியம் தரும் விதத்தில் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.
ஒரு பகுதியில் லிங்கமும், இன்னொரு பகுதியில் லிங்கத்தின் அடிப்பாகமும் அமைந்துள்ளது. பெரிய பூகம்பத்தால் மேற்பகுதியில் இருந்து பிரிந்து கீழ்ப்பகுதி இப்போது உள்ள இடத்திற்கு நகர்ந்து விட்டது.
கெடகேஷ்வர் கோவில் இந்த சம்பவத்தால்தான் இன்றைய நிலையில் புகழ்பெற்று விளங்குகிறது. இப்போதுள்ள இடத்திற்கு நகரும்போது சுற்றிலும் மூங்கில் மரங்களும், லிங்கள் திறந்தவெளியிலும் இருந்தன. பின்னர்தான் லிங்கத்தை சுற்றி கோவில் எழுப்பப்பட்டது.
வருடம் முழுதும் திறந்திருப்பதால் எந்த நேரத்தில் பயணிகள் வரலாம். உள்ளூர் சங்கம் ஒன்று இக்கோவிலை நிர்வகித்து வருகிறது.



Click it and Unblock the Notifications