ஜவஹர், தானே

தானே மாவட்டத்தில்  சராசரியாக 447மீட்டர் (1466அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை ஸ்தலமானது மாவட்ட மையப்பகுதியிலிருந்து 79 கி.மீ தூரத்திலும் மும்பையிலிருந்து 180 கி.மீ தூரத்திலும் உள்ளது.

முன்னர் ராஜவம்சத்துக்கு சொந்தமான ராஜ்யமாக விளங்கிய இது பசுமையான அடர்த்தியான தாவரங்கள் மற்றும் அழகான சிறு அருவிகளுடன் காணப்படுகிறது. சத்ரபதி சிவாஜி சூரத்திற்கு செல்லும்போது இந்த மலைப்பகுதியில் முகாமிட்டிருந்த தாக வரலாறு கூறுகிறது.

ஜவஹர் மலை அதன் குளுமைக்காகவும் பசுமையான இயற்கைக்காட்சிகளுக்காகவும் தானாவின் மஹாபலேஷ்வர் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைவாசஸ்தலத்தில் வார்லி வகை ஓவியங்கள் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

இந்த பிரத்யேக ஓவிய பாணி மஹாராஷ்டிர மாநிலத்தின் வார்லி பழங்குடி இனத்தவர்க்கு உரியதாகும்.மயங்க வைக்கும் ததரா நீர்வீழ்ச்சி மற்றும் பலுஸா நீர்வீழ்ச்சி, புராதனமான பூபத்காட் கோட்டை மற்றும் ஜய் விலாஸ் கோட்டை, ஹனுமான் பாயிண்ட் மற்றும் சன்செட் பாயிண்ட் போன்ற மலைக்காட்சி தளங்கள் போன்ற வியப்பூட்டும் சுற்றுலா அம்சங்கள் இந்த மலைவாசஸ்தலத்தில் காணப்படுகின்றன.

Please Wait while comments are loading...