இந்தியாவிலேயே சனி பகவானுக்காக கட்டப்பட்டுள்ள ஒரே கோவிலை கொண்டுள்ள இடம் தேனி மாவட்டத்திலுள்ள குச்சானூர் ஆகும். இந்த இடத்தில் சனி பகவான் தன்னுடைய முழு சக்தியுடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
எனவே தான் சனி பகவானின் பெயர்களில் ஒன்றாக விளங்கிய குப்ஜானூர் என்ற பெயரை பெற்ற இந்த இடம் இன்று குச்சானூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் குச்சானூரில் வடதிசையைப் பார்த்தவாறு இருக்கும் வடகுரு கோவிலும் உள்ளது.
பழமையான கோவிலான, இதில் குடியிருக்கும் கடவுளை இந்திரர் வணங்கி வந்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இங்கிருக்கும் ஐந்து தலைகளையுடைய விநாயக பெருமான், பஞ்சமுக கணபதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
குச்சானூரின் வழியாக பாயந்து செல்லும் சுரபி என்ற சிற்றோடை நதியின் கரையில் இந்த புகழ் மிக்க சனீஸ்வரர் வீற்றிருக்கிறார். தேனியிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் இருக்கும் குச்சானூருக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்து, தங்களுடைய பாவங்களை சனி பகவானிடம் முறையிட்டு அருள் பெறுகின்றனர்.



Click it and Unblock the Notifications