Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவல்லா » ஈர்க்கும் இடங்கள் » சக்குளத்து காவு கோயில்

சக்குளத்து காவு கோயில், திருவல்லா

11

சக்குளத்துகாவு கோயில் திருவல்லாவிலிருந்து 12 கி.மீ தூரத்தில் மேற்கே அமைந்துள்ளது. பக்தர்களை மட்டுமல்லாது சுற்றுலா ரசிகர்களையும் இது தன் ரம்மியமான இயற்கைச்சூழலால் ஈர்த்து வருகிறது.

பம்பா மற்றும் மணிமாலா ஆறுகளுக்கிடையே, பந்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் எல்லையில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த கோயிலில் சக்குள்ளத்தம்மா என்ற பெயரில் பகவதி அம்மன் தெய்வம் வழிபடப்பட்டு வருகிறது.

பெண்களுக்கான சபரிமலை என்ற சிறப்பு அந்தஸ்தையும் இந்த சக்குளத்துகாவு கோயில் பெற்றுள்ளது. நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இங்கு வருடாந்திர முக்கியத்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒரு காட்டின் நடுவே அமைந்திருப்பதால் நிசப்தம் நிரம்பிய சூழலையும் ஆன்மீக பிரகாசத்தையும் இக்கோயில் கொண்டுள்ளது.

இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இயற்கை எழில் கண்ணைக் கவர்வதாக இருப்பதுடன் இங்கு ஒரு பிரசித்தமான படகுப்பந்தயமும் நடத்தப்படுகிறது. இந்த கோயிலை சுற்றியுள்ள இயற்கை சூழலில் உலாப்போவதும் எழிற்காட்சிகளை ரசிப்பதும் மனதை லேசாக்கும் அனுபவமாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Aug,Fri
Return On
22 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Aug,Fri
Check Out
22 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Aug,Fri
Return On
22 Aug,Sat