திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஆக்குளம் ஏரி மெய்மறக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளை தன் பின்னணியில் கொண்டுள்ளது. தென்னைமரங்கள் அடர்ந்த உப்பங்கழி ஓடைகளும் இணைந்திருக்கும் இந்த ஏரியில் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை பயணிகள் அனுபவிக்கலாம்.
இதமான தென்றலின் ஸ்பரிசம் மற்றும் சிறு அலைகள் நெளியும் ஏரியின் தரிசனம் போன்றவை உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டும் அம்சங்களாக இங்கு காத்திருக்கின்றன.
இந்த ஆக்குளம் ஏரியானது வேலி ஏரி எனும் பெரிய ஏரி கடலுடன் சங்கமிக்கு இடத்தில் உருவான ஒன்றாகும். ஆக்குளம் சுற்றுலாக்கிராமமும் இந்த ஏரியின் கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாக்கிராமத்தில் நீச்சல், நீர் விளையாட்டுகள் போன்றவற்றில் பயணிகள் ஈடுபடலாம். இயற்கையாகவே உருவானது போன்று உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்டமான சங்கு சிற்பத்தை இந்த ஏரியின் கரையில் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications