Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவனந்தபுரம் » ஈர்க்கும் இடங்கள் » நெய்யாறு அணை மற்றும் வனவிலங்கு சரணாலயம்

நெய்யாறு அணை மற்றும் வனவிலங்கு சரணாலயம், திருவனந்தபுரம்

28

நெய்யாறு அணையானது 1958-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. நெய்யாறு, கல்லாறு மற்றும் முல்லையாறு போன்றவை சங்கமிக்கும் இடத்தில் இந்த அணை நிர்மாணிக்கப்ப்பட்டிருக்கிறது.

குடும்பத்துடன் சிற்றுலா செல்வதற்கும் இயற்கைப் பொழுதுபோக்குக்கும் ஏற்ற ஸ்தலமாக இது பிரசித்தி பெற்றுள்ளது. இந்த அணைப்பகுதிக்கு அருகில் பல காட்டுயிர் அம்சங்களும் தாவரங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

எனவே இது ஒரு காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வனவிலங்கு பூங்காவில் ‘லயன் சஃபாரி’ செல்வதன் மூலம் சிங்கம் மான் போன்ற விலங்குகளை அதன் இயற்கையான சூழலில் பார்க்கலாம். இங்கு ஒரு முதலைப்பண்ணையும் உள்ளது.

ஏராளமான முதலைகள் வெயில் காய்ந்தபடி படுத்திருப்பதை பார்ப்பது ஒரு சுவாரசியமான அம்சம். இங்குள்ள காவல் கோபுரத்தின் உச்சியில் ஏறி சுற்றுலுமுள்ள இயற்கைக்காட்சிகளை ரசிக்கமுடிவது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். இதற்கு ஒரு சிறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், இங்கிருந்து 7கி.மீ தூரத்தில் யானைகள் பராமரிப்பு மையம் ஒன்றும் உள்ளது.

திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெய்யாறு அணைப்பகுதியை பேருந்து அல்லது வாடகைக்கார், டாக்ஸி போன்றவற்றின் மூலம் சென்றடையலாம். இந்த சுற்றுலாத்தலத்தை சுற்றிப்பார்க்க ஒரு நாள் ஒதுக்குவது நல்லது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu