கோதண்ட ராமர் திருக்கோயில், மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் நடுவில் அமைந்த முடிகொண்டான் என்னும் இடத்தில் உள்ளது. இக்கோயிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமமும் சுமார் 20 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக நம்பப்படுகிறது.
தென்னிந்தியாவின் பழம்பெரும் கோயில்களுள் ஒன்றான இது, விஷ்ணுவின் அவதாரமாகிய ராமருக்குரிய வழிபாட்டுத்தலமாகும். ராமபிரான், இக்கோயிலில் அரச திருக்கோலத்தில் காணப்படுகிறார். ராமபிரான், அரசகோலத்தில் காணப்படும் மிகச்சில கோயில்களுள் இதுவும் ஒன்று.
புராணங்களின் படி, ராமபிரானின் பட்டாபிஷேகத்திற்கு முன்பே, இவ்வாறு அரசகோலம் பூண்டு அருள்பாலித்ததாக நம்பப்படுகிறது. இது பரத்வாஜ முனிவரை திருப்திபடுத்துவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இங்கு ராமர் சிலை, கிரீடம் தரித்த வண்ணம் உள்ளது. ராம பக்தர்களிடையே, இக்கோயில் மிகவும் புகழ்பெற்று விளங்குவதோடு அவர்களில் பலரை வருடந்தோறும் இங்கு வரவழைக்கக்கூடியதாக விளங்குகிறது. இக்கோயிலில் வந்து ராமபிரானை வழிபட்டால் அனைத்து லௌகீக பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைப்பதாக பெரிதும் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications