திருவட்டாறில் இருக்கும் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் 108 திவ்யதரிசனங்களுள் ஒன்று. இதன் காரணமாக பக்தர்கள் தொடர்ந்து இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர்.
கோதை, பாரலீ மற்றும் தாமிரபரணி ஆகிய மூன்று நதிகளுக்கு நடுவே எழில்மிகும் நிலப்பரப்பில் இக்கோவில் அமைந்து இருக்கிறது. இக்கோவிலின் முக்கிய தெய்வங்கள் சிவபெருமானும், ஆதிகேசவபெருமாளும் ஆவர்.
புராணத்தின்படி ஆதிகேசவ ஸ்வாமி ஒரு கடுமையான போரில் கேசி என்கிற அரக்கனை கொன்றார். அரக்கனின் மனைவி ஆதிகேசவ ஸ்வாமியை அழிக்கும்படி கங்கை நதியிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், ஸ்வாமிகளை அவரால் வீழ்த்த முடியவில்லை.
பெரிய முகப்பு மற்றும் கதவு தூண்கள், மற்றும் மேற்கூரை ஆகியவை கேரள கட்டிடக்கலை முறையில் மரத்தால் கட்டப்பட்டு இருக்கின்றன. மரம் நேர்த்தியாக செதுக்கப்பட்டு பல்வேறு தேவர்களையும், தேவிகளையும் பல்வேறு நிலைகளில் பிரதிபலிக்கின்றன. தூண்களிலும், மேற்கூரையிலும் இந்து இதிகாசங்களில் வரும் முக்கிய காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டு இருக்கின்றன.



Click it and Unblock the Notifications