நவ திருப்பதி, தூத்துக்குடி

நவ திருப்பதி கோயில்கள் என்பவை 9 கோயில்கள். இவை விஷ்னு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாகும். இக்கோயில்கள் தாமிரபரணி   ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளன.

இந்த கோயில்கள் 108 திவ்ய தேசங்கள் மத்தியில் குறிப்பிடத்தக்கதாகும். இந்த 9 கோவில்களுக்கான பயணம் ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து ஆழ்வார்திரு நகரில் நிறைவு பெறுகிறது.

இந்த ஒன்பது கோயில்களின் பெயர்களாவன. ஸ்ரீ வைகுண்டம், திருவரகுணமங்கை, திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, துளைவில்லி மங்களம், திருகுழந்தை, தென் திருப்பதி, திருக்கோலூர்-வித்தம்மானிதி மற்றும் ஆழ்வார் திரு நகரி – நம்மாழ்வார். சமீபத்தில் டிவிஎஸ் குழுமம் இக்கோயில்களின் மராமத்தி பணிகளுக்கு நிதி உதவி செய்ததின மூலம் இக்கோயில்கள் புது பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.

Please Wait while comments are loading...