மொரெஹ்வுக்கு செல்லும் வழியில் இருக்கிறது இந்த பல்லெல் நகரம். மணிப்பூரில் உள்ள வணிக மையம் இது. தௌபல் மற்றும் சண்டெல் எல்லையில் இருக்கும் இந்த இடத்தை கடந்து தான் தேசிய நெடுஞ்சாலை எண் 39 கடந்து செல்கிறது. இம்பாலிலிருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ளது பல்லெல். மேலும் ட்ரான்ஸ்-ஆசிய சூப்பர் நெடுஞ்சாலையின் நுழைவு வாயிலாக விளங்குகிறது பல்லெல்.
சண்டெல் மலைகளும் தௌபல் நிலப்பகுதிகளும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது பல்லெல். இவையிரண்டும் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் பல்லெலின் அழகு மேன்மேலும் கூடுகிறது. மொரெஹ் போகும் வழியில் இருக்கும் பல்லெல் நம் கண்களுக்கு விருந்தாக அமையும். இதன் அழகை கண்டு கழிக்கவே சுற்றுலாப் பயணிகள் இங்கு வர விரும்புவர்.
விவசாயம் தான் பல்லெலின் முக்கிய வாழ்வாதாரம். இது போக இங்கு வாழும் பழங்குடியினர் கைவினைப் பொருட்களை விற்றும் பிழைக்கின்றனர். பல சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். மரியாங்க்ஸ், குக்கிஸ், மெய்டெய்ஸ் மற்றும் லம்கங்ஸ் போன்றவர்கள் தான் இங்கு வாழும் முக்கிய பழங்குடியினர்.



Click it and Unblock the Notifications