தௌபலில் பல ஏரிகளும் நதிகளும் உள்ளன. அவைகளில் மிக முக்கியமானவை இம்பால் மற்றும் தௌபல் நதிகள். இந்த நதிகளின் நீர் தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயன்படுத்துகின்றன.
லோப் ஏரி, லௌசி ஏரி, பும்லென் ஏரி மற்றும் வைதௌ ஏரி ஆகியவைகள் தான் இங்கு உள்ள ஏரிகளில் மிக முக்கியமானவைகளாகும். லோப் ஏரியைச் சுற்றி இயற்கை அழகு கொட்டிக் கிடப்பதால் சுற்றுலாப் பயணிகளிடம் இந்த இடம் புகழ் பெற்று திகழ்கிறது.
மேலும் உயரமான இடத்தில் இருக்கும் இந்த இடத்தில் அடிக்கும் குளிர்ந்த தென்றல் காற்று மேலும் ஈர்ப்பை உண்டாக்கும். லௌசி ஏரி 18 சதுர கி.மீ. பரப்பளவில் புவியியல் வல்லுநர்களிடம் புகழ் பெற்று விளங்குளிறது. இந்த ஏரியின் தண்ணீரை உள்ளூர் மக்கள் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
பும்லென் பட் என்றழைக்கப்படும் பும்லென் ஏரி, தௌபலிலுள்ள தூய்மையான தண்ணீரைக் கொண்ட ஏரி. இங்குள்ள முக்கிய ஈர்ப்பு பும்டிஸ் எனப்படும் மிதக்கும் சிதைந்த செடிகள்.



Click it and Unblock the Notifications