Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திரிசூர் » ஈர்க்கும் இடங்கள் » கேரளா கலாமண்டபம்

கேரளா கலாமண்டபம், திரிசூர்

46

கேரளத்து கலையம்சங்களையும் பாரம்பரியத்தையும் வளர்த்து பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார மையமே இந்த ‘கேரளா கலாமண்டபம்’ ஆகும். நுண்கலைப்பயிற்சிக்கென்றே அமைக்கப்பட்டுள்ள இந்த கல்வி மையத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கி பயிலும்படியான கலைக்கல்வி அளிக்கப்படுகிறது.

1930 ம் ஆண்டில் பத்மபூஷன் வல்லத்தோள் நாராயண மேனன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இது கலைப்பயிற்சிக்கூடம் எனும் வரையறைக்கும் அப்பாற்பட்ட ஒரு சமூக அடையாளத்தை பெற்றுள்ளது.

விருப்பமுள்ள யாவருக்கும் தன் கதவுகளை விரிய திறக்கும் இந்த கலாமண்டபம் கேரள மாநிலத்தின் சுற்றுலாத்துறையோடு இணைந்து செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது. கேரள பாரம்பரியத்தின் வழக்கொழிந்துபோன பல கலை வடிவங்களை நம் கண் முன்னால் நிறுத்தும் உன்னதமான சாதனையை இந்த கலாச்சார மையம் சாதித்துள்ளது.

இந்த கலாமண்டப வளாகத்தில் மிகச்சிறந்த கவிஞரும் கலைஞருமான வல்லத்தோள் அவர்களின் படைப்புகளைக்கொண்ட ஒரு அருங்காட்சியகம், கலாமண்டபத்தின் வளர்ச்சிக்கு உழைத்த சிறந்த கலைஞர்களின் புகைப்படங்களை கொண்டுள்ள ஒரு காட்சிக்கூடம் ஆகியவற்றை பார்க்க்கலாம். பழைய கலாமண்டப வளாகத்தில் வல்லத்தோள் நாராயண மேனன் அவர்களின் சமாதியும் காணப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu