திருப்பதிக்கு அருகில் உள்ள இந்த ஹனுமான் கோயில் கோகர்பாம் அணையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ராமன் தனது மனைவி சீதை மற்றும் லட்சுமணன், ஹனுமானோடு இந்த ஸ்தலத்தில் ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது.
ஹனுமான தவம் செய்த இடம் என்பதால் இது ஜபாலி என்றும் அழைக்கப்படுகிறது. ராமகுண்டம் எனும் தீர்த்தக்குளமும் கோயில் வளாகத்தில் காணப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் தவம் செய்து சாந்தி கிடைக்கப்பெற்ற ஹனுமான் தனது அருளை இந்த ஸ்தலத்துக்கு வழங்கியதாக ஐதீகம்.
இந்த கோயிலில் துதிப்பவர்கள் பரம்பொருளை உணர்வார்கள் என்றும் நம்பிக்கை நிலவிவருகிறது. இந்த கோயில் வாசலில் உள்ள ஒரு மரத்தின் அடியில் விநாயகக்கடவுள் சிலையும் காணப்படுகிறது. இது சுயம்புவாக உருவானதாக நம்பிக்கைகள் நிலவுகின்றன.



Click it and Unblock the Notifications