திருப்பதியில் உள்ள இந்த கோதண்டராமஸ்வாமி கோயில் 10 ம் நூற்றாண்டில் சோழர் குல ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது. ராமனுக்காக அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் காட்சியளிக்கும் ராமர் சிலையை தரிசிக்கலாம்.
புராணங்களின்படி இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய ராமன் இந்த ஸ்தலத்தில் ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது. நரசிம்ம ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் விஜயநகர கோயிற்கலை அம்சங்களின் பாதிப்பை கொண்டுள்ளது.
ஏகதள பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் சுவர்களில் சிம்ம உருவங்கள் பொதிக்கபட்டிருக்கின்றன. இந்த கோயிலின் கோபுரம் வட்டவடிவில் அமைந்து உச்சியில் கலசத்துடன் காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications