வெங்கடேஸ்வரர் கோயிலான திருப்பதி அமைந்திருக்கும் மலைஸ்தலமும், அதைச்சுற்றியுள்ள மலைப்பகுதிகளும் திருமலா என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3200 உயரத்தில் அமைந்திருக்கும் இம்மலைகளில் ஏழு சிகரங்கள் வானுயர்ந்து நிற்கின்றன.
ஆதிசேஷனின் வடிவாக கருதப்படும் இந்த சிகரங்கள் நாராயாணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி மற்று வெங்கடாத்ரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இவற்றில் வெங்கடாத்ரி எனப்படும் ஏழாவது சிகரத்தில்தான் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயில் உள்ளது. திருமலா எனும் சொல் திராவிட மொழிகளில் ‘புனிதமலை’ என்ற அர்த்தத்தை தாங்கி நிற்கிறது என்பது சொல்லாமலே விளங்கக்கூடிய ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications