கோயம்புத்தூரிலிருந்து ஈரோட்டிற்கு செல்லும் வழியில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவிநாசி என்ற ஊரில், அமைந்துள்ளது அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில். பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், 15 ஆவது நூற்றாண்டில் சுந்தர பாண்டியன் என்னும் மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது.
இக்கோவில் குறித்து புராணக்கதை ஒன்று உண்டு. அப்புராணக்கதைப்படி ஒருமுறை இரண்டு பாலகர்கள் இங்கு உள்ள ஏரியில் குளிக்க வந்த பொழுது அங்கு வசித்த ஒரு முதலை ஒரு பாலகனை விழுங்கி விட்டதாம்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உயிரோடு இருந்த பாலகனுக்கு உபநயன விழா நடந்த பொழுது இறந்த பாலகனின் பெற்றோர் மிகத் துயரத்தோடு இருந்த சமயத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் அந்த இடத்தைக்கடக்கும் பொழுது இத்துயரக் கதையைக் கேட்டறிந்து இறந்த பாலகனை அவனது பெற்றோருக்கு திரும்ப உயிருடன் அளிக்கும் படி சிவபெருமானை நோக்கி மனமுருகி பதிகம் பாடினாராம்.
அப்பொழுது வறண்டு கிடந்த அந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி அந்த முதலையும் தோன்றி அதன் வாயிலிருந்து இறந்த பாலகனை உயிரோடு எடுத்துத் தந்ததாம் . இந்தக் கோவிலைத் திருப்பூருக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டும். இக்கோவிலில் உள்ள தேர் தென்னிந்தியாவிலுள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications