திருப்பூர் நகரத்தின் மற்றொரு முக்கியமான இடம் திருப்பூர் திருப்பதி கோவில் ஆகும். திருப்பூர் நகர எல்லைக்குள் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவிலைப் போன்றே இக்கோவில் அமைந்துள்ளது. வருடத்தின் அனைத்து நாட்களிலும் இக்கோவில் திறக்கப்பட்டு, அனைத்துவகையான ஆகம பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
வருடத்தின் அனைத்து நாட்களிலும் இக்கோவிலுக்குச் செல்லலாம் என்றாலும், சிறப்புப் பூஜைகள் நடத்தப் படும் பொழுது இக்கோவிலைப் பார்க்கச் செல்வது நல்லது. திருப்பூர் நகரத்திலிருந்து பேருந்து மூலமாகவோ ஆட்டோ ரிக்சா மூலமாகவோ இக்கோவிலை எளிதில் வந்தடையலாம்.



Click it and Unblock the Notifications