» »காஞ்சி பட்டு, பனாரஸ் பட்டு தெரியும்! .. அப்ப இதெல்லாம்?

காஞ்சி பட்டு, பனாரஸ் பட்டு தெரியும்! .. அப்ப இதெல்லாம்?

Posted By: Bala Karthik

நீங்கள் ஒரு ஷாப்பிங்க் பிரியரா? ஆம், யார் ஒருவர் தான் பார்க்கும் வண்ணம், கலவை, என ஆடைகளை வேறு கோணத்தில் பார்த்து அதன்மேல் மனதை பறிக்கொடுத்து காதல் கொள்கின்றனரோ...! அவரே ஷாப்பிங்க் பிரியர். அப்படி என்றால் நாங்கள் கூறப்போகும் நாட்டில் பரவி பரந்து கிடக்கும் இடங்களின் மீதும் ஆர்வம் ஏற்படுவதோடு, அங்கே சென்று அந்த ஆடைகளின் மீதும் உங்கள் கைகள் பட ஆசைக்கொள்ளக்கூடும்.

நம் நாட்டில் விதவிதமான தனித்துவமிக்க ஆடைகள் காணப்பட, அவற்றின் நிறங்களும் மாறுபட்டு காணப்படுகிறது; அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற விளம்பர தூதர்களும் இங்கே இந்தியாவில் காணப்படுகின்றனர். அவ்வாறான ஆடை உற்பத்திக்கு உகந்த இடங்களுள் காஞ்சிபுரமும் ஒன்றாக காணப்பட, பட்டு புடவைகளுக்கு இவ்விடம் பெயர் பெற்று விளங்குகிறது. மஹேஷ்வரின் பெருமையாக மஹேஷ்வரி புடவைகள் காணப்பட, நாட்டில் இன்னும் பல இடங்களும் புகழ்பெற்று ஆடைகளுக்காக சிறந்து காணப்படுகிறது.

அப்பேற்ப்பட்ட இடங்களை நாம் பார்ப்பதோடு, அவற்றுள் எதாவது ஒரு இடத்திற்கு மட்டும் அடுத்த விடுமுறை செல்லவும் ஆயத்தமாகலாம் சரியா?

பக்ரு – ராஜஸ்தான்:

பக்ரு – ராஜஸ்தான்:

இந்த பக்ரு கிராமம், கரு நீலம், ஊதா, மற்றும் டௌப் ஆகிய சாயலைக்கொண்டு மூடப்பட்டிருக்க அது பார்ப்பதற்கு பரவசத்தை தருகிறது. இந்த கிராமத்தை நாம் அடைய ஜெய்ப்பூரிலிருந்து வெளியில் ஒரு மணி நேரம் பயணம் செய்யவேண்டியதாக உள்ளதோடு, மண் தடுப்பு எதிர்ப்பு அச்சு தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்றும் காணப்பட, உள்ளூர் சமூகத்தினரான டபு என்றவர்களாலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் தான் சுண்ணாம்பு, களி மண், இயற்கை பசை மற்றும் வைக்கோல் பயன்படுத்தி உருவாக்குகின்றனர்.

இயற்கை வண்ணங்களை ஆடைகளுக்கு பூசப்பட, சுத்தமாக கையால் அச்சிடப்பட்டு நெய்ததாகவும் தெரிகிறது. இந்த செயலின் சிறப்பம்சமாக கைவினைஞர்களால் கையொப்பமிட்டு அழகான வடிவியல் முறைகளையும் பின்பற்றிட, இந்த தொழிலை கற்றுத் தேர்ந்தவர்களின் திறமையும் தனித்தன்மை மிக்கதாய் தெரிகிறது.

 பத்தன் – குஜராத்:

பத்தன் – குஜராத்:

பட்டோலாவின் இரட்டை இகட் பட்டுகள் முழுவதும் காணப்பட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதோடு, இதனை உடுத்திக்கொள்பவர்கள் தீமையை விட்டு விலகி அதிர்ஷ்டமும் கைக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த ஆடையில் காணப்படும் வடிவங்கள் சமச்சீரை முன்னோடியாக கொண்டிருக்க, இதன் வடிவமைப்புகளும் குஜராத்தின் படிக்கிணறுகளை போல காட்சியளித்து மாய தோற்றத்தை நமக்கு தருகிறது.

சிவப்பு மற்றும் பச்சை வண்ண சாயல் கொண்டு பட்டோலா நெய்யப்பட்டிருக்க, வடிவியல் தோற்றங்களும் காணப்பட, அவற்றுள் யானைகள் மற்றும் கிளிகளும், வண்ணத்து பூச்சிகள் மற்றும் மலர்களும் அடங்கும். எச்சரிக்கை வார்த்தையாக, இந்த புடவைகள் உங்கள் கைகளுக்கு எளிதாக வருவது இல்லை என்றும், இந்த புடவை மேல் நாம் கைவைக்க ஒரு வருடமாவது ஆகும் என்றும் தெரியவருகிறது. ஆம், ஒரு புடவையை வடிவமைத்து முடிக்க, இரண்டு கைவினைஞர்கள் நெய்து பணியை முடித்திட ஆறு மாதங்கள் முதல் அதற்கு மேலும் ஆகிறது.

 காஞ்சிபுரம் – தமிழ்நாடு:

காஞ்சிபுரம் – தமிழ்நாடு:

ஒரு நபர் காஞ்சிபுரம் என்ற இந்த வார்த்தையை கேட்டால், அவர் மனதில் தோன்றும் முதல் எண்ணமாக அழகிய பட்டுப்புடவை தான் கண்கள் முன்னே வந்து செல்லும். இங்கே காணப்படும் பட்டுப்புடவைகள் சுத்தமான மல்பெரி பட்டு நூல்கள் கொண்டு நெய்திட, கைவினை நெய்தலாகவும் அது காணப்படுகிறது. அது பரவலான மாறாக பார்டரை கொண்டிருக்க, ஆலய பார்டரை அவை ஒத்திருப்பதோடு, கட்டங்கள், கோடுகள் மற்றும் மலர் வடிவங்களும் புடவையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த புடவையில் காணப்படும் வடிவங்கள், தென்னிந்திய ஆலய வேதங்களை முன்னோடியாக கொண்டிருக்க, அவை புராணங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் என்றும் தெரிய வருகிறது.

எது எப்படியோ? காஞ்சிபுர பட்டுப்புடவைகள் தனித்தன்மையுடன் காணப்பட, உடலுக்கு ஏற்ற பார்டர்களை கொண்டு தனி நெய்தலுடன் காணப்படுவதோடு, மென்மையாக ஒன்றிணைந்தும் காணப்படுகிறது. இந்த நெய்தல் இணைப்பு வலுவாக இருக்க, புடவையை நாம் பிரித்தாலும், பார்டர் உடலைவிட்டு தனியாக தெரிவதில்லை. அதோடு மற்ற புடவைகளை காட்டிலும் தனித்துவத்துடன் வேறுபட்டு பெருமை பொங்க விளங்குகிறது.

 சுவல்குச்சி – அசாம்:

சுவல்குச்சி – அசாம்:

இந்த மெக்கேஹலா சோடார் என்பது சவுகரியமானதாக இருக்க, இந்த புடவையை அணியும் ஒருவர் மேலே பறந்து பரவசத்தில் திளைப்பர். இந்த மெக்கேஹலாவை உள் நாட்டு பட்டுகள் போல் நெய்திட, இதனை ‘முகா' அல்லது பேல் பேட் பட்டு மற்றும் பருத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புடவைகளில் உள்ளூர் மலர்கள் மற்றும் கொடிகள், மயில்கள், மற்றும் வண்ணத்து பூச்சிகள், அதோடு காஷிரங்காவின் காண்டாமிருகங்களும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வடிவமைப்புகள் காலம் பின்னோக்கி அஹோம் வம்சத்திற்கு உங்களை அழைத்து செல்கிறது; அவர்கள் பாரம்பரிய நகைகளுக்காக ஆதிக்கத்தை செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

OFFL SITE

 பகல்கோட் – கர்நாடகா:

பகல்கோட் – கர்நாடகா:


பகல்கோட் மாவட்டத்தின் இல்கல் என்ற ஒன்றிலிருந்து இப்பெயர் புடவைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த புடவைகளில் தெளிவான மாறுபட்ட நிறங்கள் உபயோகித்திட மேல் பத்து தொழில் நுட்பமானது இணைக்கப்பட்டு தனி பார்டருடனும், பட்டின் வெளியே பட்டு கொண்டு செயற்கை பட்டு உடுத்தி பருத்தி உடலையும் கொண்டிருக்கிறது. இந்த புடவையில் கோடுகளை எம்பிராய்டரியாக தந்திட, சாலுக்கிய வம்ச காலத்திற்கு அது நம்மை அழைத்து செல்கிறது.

 பிஷ்னுபூர் – மேற்கு வங்கம்:

பிஷ்னுபூர் – மேற்கு வங்கம்:

பலுச்சேரி புடவைகள் உண்மையிலே பட்டுபுடவையின் உன்னதத்தை தந்திட, இந்திய வரலாறு மற்றும் புராணங்களின் நேர்த்தியான அர்ப்பணிப்பாகவும் அமைந்திடுகிறது. இந்த பார்டர் மற்றும் பல்லுக்கள் முர்ஷிதாபாத் நாவாபின் நீதிமன்றத்தை காட்சிப்படுத்திட, அதோடு இணைந்து ஆங்கிலேயர்களின் குதிரைகளையும் கொண்டு, இராமாயணம் மற்றும் மகாபாரத புராணங்களின் பெருமையையும் தாங்கிக்கொண்டும் நெய்யப்பட்டிருக்கிறது.

 சாம்பால்பூர் – ஒடிசா:

சாம்பால்பூர் – ஒடிசா:


இதில் நம்பகத்தன்மை கொண்ட சாம்பால்புரி இகாத் நிறம் பூசப்பட்டிருக்க, சாயம் போவதை அது தடுக்கிறது. இந்த புடவைகள் பட்டு அல்லது பருத்திக்கொண்டு நெய்யப்படுகிறது; இந்த புடவையில் டைய் பூசப்பட்ட நூல் பயன்படுத்தப்பட, பின்புலத்தில் வெளிர் ஆரஞ்ச் மற்றும் இளஞ்சிவப்பு கொண்டு, மஞ்சள் மற்றும் கருப்பு நிற சாயலையும் கொண்டுள்ளது. இந்த வடிவங்கள் சக்கரம் மற்றும் வடிவங்களை ஒத்திருக்க, அவை உள்ளூர் கோவிலின் சிற்பங்கள் என்றும், கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் வன உயிரினங்களையும் குறிப்பனவையாம்.

Sujit kumar

 வாரனாசி – உத்தர பிரதேசம்:

வாரனாசி – உத்தர பிரதேசம்:

நாட்டில் உள்ள பல மணப்பெண்களும் பட்டு புடவை எடுக்கும் ஒரு இடமாக வாரனாசி அமைகிறது. இந்த துணியில் காணப்படும் மலர் வடிவங்கள், மயில்கள், பச்சை நிற பய்ஸ்லே, என மற்ற வடிவங்களும் முகலாய பேரரசின் வரலாற்றை நினைவுகூர்ந்து, காலனித்துவ ஆதிக்கத்தையும் காண்பித்து பின்னோக்கி அழைத்து செல்கிறது. இந்த புடவைகள் நாட்டில் காணப்படும் மற்ற புடவைகளை காட்டிலும் சிறப்பான ஒன்றாகவும் விளங்குகிறது.

EKabisheik

மஹேஷ்வர் – மத்தியபிரதேசம்:

மஹேஷ்வர் – மத்தியபிரதேசம்:

இந்த மஹேஷ்வரி புடவைகள் பருத்தியை மட்டுமே கொண்டு நெய்யப்பட, இந்த புடவைகளின் பார்டர்களாக சூரத்தின் ஷாரி காணப்படுகிறது; இந்த புடவைகள் தற்போது பட்டு மற்றும் பருத்தி இணைந்து உருவாக்கப்படுகிறது. பார்டரில் காணப்படும் வடிவியல் வடிவங்கள், படிகள் மற்றும் நகரங்களில் காணும் தொடர்ச்சிகளின் அமைப்பாகவும், அந்த பகுதிகளில் காணப்படும் ஆலயங்களின் வெளித்தோற்றமாகவும் காணப்படுகிறது. இவை புடவையின் அடையாள நிலையை காண்பிக்க, அது வரலாற்றையும் தொட்டு செல்கிறது.

 பொச்சம்பல்லி – தெலுங்கானா:

பொச்சம்பல்லி – தெலுங்கானா:

பூதன் பொச்சம்பல்லி கிராமத்தில் ஒற்றை மற்றும் இரட்டை இகட் வடிவங்களானது பட்டு மற்றும் பருத்தியால் காணப்படுகிறது. இவற்றுள் நெய்தலுக்கு பயன்படுத்துபவைகளுள் சாதாரணத்துடன் அசாதாரண கலவையும் சேர்க்கப்படுகிறது. இகட் பாணிகள் இந்த பகுதியின் 1900ஆம் ஆண்டு வடிவத்தை ஒத்து காணப்பட, நல்கொன்டா மாவட்டத்தின் நிறைய கிராமங்கள் இந்த பாணியை பின்பற்றுகின்றனர். அவர்களுடைய கற்பனைக்கு ஏற்று விதவிதமான நிறக்கலவையையும் பயன்படுத்துகின்றனர். இந்த பொச்சம்பல்லி கிராமம், இரட்டை இகாட்களுக்கு முக்கிய மையமாகவும் காணப்படுகிறது.

Read more about: travel