Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் 10 மிகப்பெரிய விளையாட்டு மைதானங்கள்!

இந்தியாவின் 10 மிகப்பெரிய விளையாட்டு மைதானங்கள்!

By

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு மைதானங்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இருந்தும் என்ன செய்வது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல இன்னும் இந்தியா தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறது.

இங்கு கிரிக்கெட் மீது தணியாத ஆர்வம் கொண்டவர்கள் வாழ்வதாலோ என்னவோ ஊருக்கு ஒரு கிரிக்கெட் மைதானம் உள்ளது.

இதன் காரணமாகத்தான் உலகிலேயே அதிக கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய 10 விளையாட்டு மைதானங்களை இப்போது பார்ப்போம்.

சால்ட் லேக் ஸ்டேடியம்

சால்ட் லேக் ஸ்டேடியம்

சால்ட் லேக் ஸ்டேடியம் என்று பிரபலமாக அறியப்படும் தி யுவ பாரதி க்ரீடாங்கன் ஸ்டேடியம் கொல்கத்தாவின் பிதான்நகரில் அமைந்திருக்கிறது. இந்த மைதானம் இந்தியாவின் மிகப்பெரிய மைதானமாகவும், உலகிலேயே 2-வது மிகப்பெரிய கால்பந்து மைதானமாகவும் கருதப்படுகிறது. 1,20,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதிகொண்ட இந்த மைதானத்தில் கால்பந்து போட்டிகள் மட்டுமின்றி தடகள போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

ஈடன் கார்டன் மைதானம்

ஈடன் கார்டன் மைதானம்

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் 2-வது பெரிய கிரிக்கெட் மைதானமாக ஈடன் கார்டன் மைதானம் அறியப்படுகிறது. அதோடு இந்தியாவின் மிகப்பழமையான கிரிக்கெட் மைதானமாகவும் கருதப்படும் ஈடன் கார்டன் மைதானம் இந்திய இராணுவத்திற்கு சொந்தமானது என்பது நிறைய பேருக்கு தெரியாத செய்தி. தற்போது டெஸ்ட், ஒருநாள், 20-20 என்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படும் ஈடன் கார்டன் மைதானத்தில் 90,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது.

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்

டெல்லியின் முக்கியமான மைதானங்களில் ஒன்றாக கருதப்படும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில்தான் 2010-ஆம் ஆண்டு காமன்வெல்த்விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இங்கு பற்பல விளையாட்டுகள் நடத்தப்படுவதுடன் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும்படி விரிவுபடுத்தப்படுகிறது.

D.Y.பட்டேல் ஸ்டேடியம்

D.Y.பட்டேல் ஸ்டேடியம்

நவி மும்பையின் நெருள் பகுதியில் அமைந்திருக்கும் D.Y. பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது. இங்கு 9 டென்னிஸ் கோட்டுகளும், 4 உள்ளரங்கு பேட்மிட்டன் கோட்டுகளும், ஒரு ஒலிம்பிக் அளவு நீச்சல் குளமும் இருக்கின்றன. இந்த மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவான இசையமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் இதுபோன்ற வசதி செய்யப்பட்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானமாகவும் இது கருதப்படுகிறது.

கலூர் சர்வதேச மைதானம்

கலூர் சர்வதேச மைதானம்

கொச்சியில் அமைந்திருக்கும் கலூர் சர்வதேச மைதானம் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானம் முதலில் கால்பந்து ஆட்டத்துக்காக கட்டப்பட்டாலும் எண்ணற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இங்கு நடந்துள்ளன. அதோடு அரசியல் பேரணிகள், பொருட்காட்சிகள் போன்றவற்றுக்காகவும் கலூர் சர்வதேச மைதானம் பயன்படுத்தப்படுகிறது.

ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

சத்தீஸ்கரின் நயா ராய்பூர் (புதிய ராய்பூர்) பகுதியில் அமைந்திருக்கும் ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்தான் இந்தியாவில் அண்மையில் கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானமாகும். இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக கட்டப்பட்டிருந்தாலும் இதுவரை கனடா மற்றும் சத்தீஸ்கர் மாநில அணிகள் பங்கேற்ற ஒரே ஒரு போட்டி மட்டுமே இங்கு நடந்துள்ளது. இந்த மைதானம் 65,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது.

எம்.சின்னஸ்வாமி ஸ்டேடியம்

எம்.சின்னஸ்வாமி ஸ்டேடியம்

பெங்களூரின் குவீன்ஸ் ரோடு மற்றும் கப்பன் பார்க்கிற்கு மத்தியில் அமைந்துள்ள எம்.சின்னஸ்வாமி ஸ்டேடியம் 1969-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அது கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் இங்கு நடந்துள்ளன. தற்போது 55,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானத்தின் இருக்கை வசதியை 70,000-ஆக உயர்த்துவதற்கு கர்நாடக கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு வருகிறது.

 சர்தார் பட்டேல் ஸ்டேடியம்

சர்தார் பட்டேல் ஸ்டேடியம்

குஜராத்தின் அஹமதாபாத் நகரில் அமைந்திருக்கும் சர்தார் பட்டேல் ஸ்டேடியம் மோட்டேரா ஸ்டேடியம் என்றும் அறியப்படுகிறது. இந்த கிரிக்கெட் மைதானம் 54,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது.

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் முன்னர் விசாகா சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது 55,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானத்தின் இருக்கை வசதியை 65,000-ஆக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சுப்ரதா ராய் சஹாரா ஸ்டேடியம்

சுப்ரதா ராய் சஹாரா ஸ்டேடியம்

மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானம் என்ற பெயரிலும் அறியப்படும் சுப்ரதா ராய் சஹாரா ஸ்டேடியம் புனே நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது. இந்த மைதானம் 55,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது. இங்கு மழைநீர் வடிகால், ஸ்குவாஷ் மற்றும் பேட்மிட்டன் கோர்ட்டுகள், நீச்சல் குளம், ஸ்பா, உணவகம், மது விடுதி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் இந்த மைதானம் இந்தியாவின் மேம்படுததப்பட்ட கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+