Search
  • Follow NativePlanet
Share
» »மார்ச் மாதத்தில் ஜில்லுன்னு டிரிப் போக டில்லியை சுற்றி இத்தனை அழகான மலை பிரதேசங்கள் இருக்கா?

மார்ச் மாதத்தில் ஜில்லுன்னு டிரிப் போக டில்லியை சுற்றி இத்தனை அழகான மலை பிரதேசங்கள் இருக்கா?

தலைநகர் டில்லியில் சாதாரண நாட்களிலேயே காற்று மாசுபாடு காரணமாக வெப்பம் சற்று அதிகமாக தான் இருக்கும். அதிலும் சம்மரில் கேட்கவே வேண்டாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மற்றும் டில்லி நகரத்தின் வேகமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்கவும், இயற்கையின் மடியில் சில நாள் ஓய்வு எடுக்கவும் நினைத்தால், டில்லிக்கு அருகில் பல மலை பிரதேசங்கள் உள்ளன. இவை அற்புதமான இயற்கைக் காட்சிகளை மட்டுமல்லாமல், அமைதியான சூழ்நிலையையும் வழங்குகின்றன. மார்ச் மாதத்தில் விடுமுறையை ஜில்லென கழிப்பதற்கு எங்கெல்லாம் செல்லலாம் வாங்க தெரிந்து கொள்ளலாம்.

mussoorie

முசோரி

"மலைகளின் அரசி" என்று அழைக்கப்படும் ஒரு அழகான மலைநகரமாகும். இது உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூனுக்கு அருகில் அமைந்துள்ளது. டில்லியிலிருந்து சுமார் 290 கிமீ தொலைவில் இருக்கும் இந்த இடம், சுற்றுலாப் பயணிகளுக்கு அழகிய இயற்கைக் காட்சிகள், பனிமூடிய மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் கண்கவர் வ்யூ பாயிண்ட் போன்ற இடங்களை வழங்குகிறது. முசோரியில் கேம்ப்டி நீர்வீழ்ச்சி, மிக பிரபலமான நீர்வீழ்ச்சி ஆகும். புகைப்படக்காரர்களும், நீச்சல் ரசிக்க விரும்புபவர்களும் அதிகமாக வரும் இடமாகும். லால்டிப், முசோரியின் மிக உயர்ந்த இடமாகும். இங்கிருந்து இமய தொடர்மலைகளை தெளிவாக காணலாம். மால் ரோடு, ஷாப்பிங், உணவு, மற்றும் சுற்றுலாப் பொருட்கள் வாங்க சிறந்த இடம்.

நைனிடால்

நைனிடால், உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைப்பாங்கான நகரமாகும். இது "ஏரிகளின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஏரிகளால் சூழப்பட்டிருக்கிறது. டில்லியிலிருந்து சுமார் 300 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், இயற்கையின் சுத்தமான அழகையும் அமைதியான சூழ்நிலையையும் அனுபவிக்க ஒரு சிறந்த சுற்றுலா தலமாக இருக்கிறது. நைனி ஏரி, நகரத்தின் முக்கிய ஈர்ப்பாக உள்ள இந்த ஏரி, படகு சவாரிக்கு பிரபலமானது. ஸ்னோ வியூ பாயிண்ட், இமயமலை பனிமூடிய மலைகளின் பரபரப்பான காட்சியை இங்கிருந்து காணலாம். நைனா தேவி கோவில், புகழ்பெற்ற இந்த கோவில், பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் முக்கியமானது. திபெத்திய சந்தை, கைத்தறி துணிகள் மற்றும் தொப்பிகள் வாங்க சிறந்த இடம். மல்லி தால், உணவகங்கள், ஷாப்பிங், மற்றும் நடைபயணத்திற்கு சிறந்த இடம்.

Shimla

சிம்லா

டில்லியிலிருந்து சுமார் 350 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிம்லா, சுற்றுலாப்பயணிகளின் கனவு தலமாக மாறியுள்ளது.பிரிட்டிஷ் ஆட்சியின் கோடைக்கால தலைநகராக இருந்ததால், இது பழமையான காலனிய கால கட்டிடக்கலையை, இயற்கையின் பசுமையை, மற்றும் அழகிய பனிமலையை இணைத்துள்ள இடமாகும். ஜக்கு கோவில் , மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய இந்த கோவிலில், மிகப்பெரிய ஹனுமான் சிலை உள்ளது.
கிரிஸ்ட் சர்ச், சிம்லாவின் பிரபலமான தேவாலயம், பிரிட்டிஷ் கால கட்டிடக்கலையின் சிறந்த உதாரணம்.

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ் என்பது உத்தரகண்ட் மாநிலத்தில், இமய மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு புனித நகரம் ஆகும். இது "யோகாவின் உலக தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது.டில்லியிலிருந்து சுமார் 250 கிமீ தொலைவில் இருக்கும் இந்த இடம், ஆன்மீக அமைதி மற்றும் சாகச அனுபவங்களை தேடும் பயணிகளுக்கு சிறந்த தேர்வாகும்.ரிஷிகேஷில் காண வேண்டிய முக்கிய இடங்கள்,லக்ஷ்மண் ஜூலா,ராம்ஜூலா,பார்மத் நிகேதன் ஆசிரமம்,திரிவேணி சங்கமம்,குன்ஜபுரி தேவி கோவில் போன்ற இடங்களாகும்.வாட்டர் ராஃப்டிங் - ரிஷிகேஷ் இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுச் சாகச விளையாட்டு தளமாக விளங்குகிறது.

லான்ஸ்டவுன்

லான்ஸ்டோன் என்பது உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அமைதியான மலைப்பாங்கான சுற்றுலா தளம் ஆகும்.பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான ராணுவத் தளமாக இருந்த இந்த இடம், இன்று இது இயற்கையின் அமைதியையும் கலாச்சார பாரம்பரியத்தையும் ரசிக்க விரும்புபவர்களுக்கான சிறந்த இடமாக மாறியுள்ளது. டில்லியிலிருந்து சுமார் 260 கிமீ தொலைவில் இருக்கும் இந்த இடம், நகரத்தின் இரைச்சலில் இருந்து விடுபட விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த விடுதியாக விளங்குகிறது. புல்வார் லேக்,தாரா தேவி கோவில்,ஸ்னோ வியூ பாயிண்ட்,மால் ரோடு போன்றவை லான்ஸ்டோனில் காண வேண்டிய முக்கிய இடங்கள் ஆகும்.

கசௌலி

கசௌலி என்பது இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு அழகிய, அமைதியான மலைநகரமாகும். இது பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட சிறிய ஹில் ஸ்டேஷன் ஆகும். டில்லியிலிருந்து சுமார் 290 கிமீ தொலைவில், 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கசௌலி நகர இரைச்சலிலிருந்து தப்பிக்க ஒரு சிறந்த அமைதியான இடமாக விளங்குகிறது. கசௌலியில் காண வேண்டிய முக்கிய இடங்களாக கிரிஸ்ட் சர்ச்,கசௌலி மால்ரோடு,குர்கா கோட்டை,சன் செட் பாயிண்ட்,கில்பர்ட் பாதை போன்றவை உள்ளன.

தர்மசாலா மற்றும் மெக்லியோட் கஞ்ச்

தர்மசாலா மற்றும் மெக்லியோட் கஞ்ச் இமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள, இமய மலைகளால் சூழப்பட்ட அழகான இடங்கள் ஆகும்.மெக்லியோட் கஞ்ச் தர்மசாலாவுக்கு அருகில் இருக்கும் மேலும் உயரம் கொண்ட ஒரு அழகான மலைப்பாங்கான இடமாகும். தர்மசாலா மற்றும் மெக்லியோட் கஞ்சில் காண வேண்டிய முக்கிய இடங்களாக கங்க்ரா கோட்டை,ஜ்வாலா தேவி கோவில்,திபெத்திய சந்தைகள்,பாக்சு நீர்வீழ்ச்சி, தலாய் லாமாவின் தனிப்பட்ட மடாலயம், திபெத்திய பண்பாட்டின் மையம்,திருண்ட்ட்ரெக் ஆகியவை உள்ளன.

தனால்டி

முசோரிக்கு அருகிலுள்ள அமைதியான மலை வாசஸ்தலமான தனால்டி, இயற்கையின் மத்தியில் தனிமையை நாடுபவர்களுக்கு ஏற்ற இடமாகும். தனால்டியில் காண வேண்டிய முக்கிய இடங்கள் எக்கோ பூங்கா,சூர்யாஸ்தமன பாயிண்ட்,அல்பைன் வனங்கள் போன்ற இடங்களாகும்.கேம்பிங் மற்றும் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் - தனால்டி அதன் டிரெக்கிங், கேம்பிங், மற்றும் பாரக்லைடிங் போன்ற சாகச விளையாட்டுகளுக்காக பிரபலமானது.

ராணிக்கேத்

இது 1869-ல் பிரிட்டிஷ் ராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ராணுவத் தளம் மற்றும் இயற்கை அழகு மிகுந்த ஹில் ஸ்டேஷன் ஆகும். தொகுப்பான பசுமை மலைகள், தெளிவான காற்று மற்றும் அமைதியான சூழல் ஆகியவற்றால் இது ஒரு சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. ஜூலாதேவி கோவில்,பினேஷ்வர் மஹாதேவ் கோவில்,குமாயூ ரெஜிமெண்டல் மியூஸியம்,ஸ்னோ வியூ பாயிண்ட் போன்றவை ராணிக்கேத்தில் காண வேண்டிய முக்கிய இடங்கள் ஆகும். ஆசியாவின் மிக உயரமான இடங்களில் ஒன்றான ராணிக்கேத் கோல்ஃப் மைதானம், கோல்ஃப் ஆர்வலர்களுக்கு ஒரு விருந்தாகும்.

பீம்தால்

நைனிடாலுக்கு அருகிலுள்ள அமைதியான மலை வாசஸ்தலமான பீம்தால், அதன் அழகிய ஏரி மற்றும் அமைதியான சூழலுக்கு பெயர் பெற்றது.பீம்தால் ஏரி,பீமேஸ்வர் மகாதேவ் கோவில்,விக்டோரியா டேம்,பீம்தால் மிதக்கும் தீவு,ஹிடிம்பா பர்வத்,கார்பெட் அருங்காட்சியகம் போன்றவை பீம்தாலில் காண வேண்டிய முக்கிய இடங்கள்.பீம்தாலின் அமைதியான சூழல், குறைவான கூட்டம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை மார்ச் மாதப் பயணத்திற்கு ஏற்ற இடமாக அமைகின்றன.

More News

    Read more about: hill stations delhi
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+