» »கல்லூரி சுற்றுலாவை சும்மா அதகளப்படுத்த ரயிலில் பயணிக்கலாம் வாங்க

கல்லூரி சுற்றுலாவை சும்மா அதகளப்படுத்த ரயிலில் பயணிக்கலாம் வாங்க

Posted By: Udhaya

நம்மில் பலருக்கு ரயில் பயணம் இரவு படுத்து காலையில் எழுந்துவர சிறப்பானதாக இருக்கும். ஆனால், உண்மையில் மிகச் சிறப்பான ரயில்பயணம் என்பது எது தெரியுமா? இரண்டுபக்கமும் பசுமையான மலைகளையும், கடற்கரையும், வண்ண வண்ண காட்சிகளும் நிறைந்த பயணம்தான். சரி அந்த பயணங்கள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.

 கோவா விரைவுவண்டி

கோவா விரைவுவண்டி

கோவாவின் வாஸ்கோ டா காமா விலிருந்து கர்நாடகத்தின் லோன்டா வரையிலான இந்த விரைவுரயில் பயணம் மிகவும் பச்சை பசேலென்று ஆர்ப்பரிக்கும் காடுகளிடையே அமையும். கோவன் பீச்சுகள் வழியாகவும், மேற்குதொடர்ச்சி மலைகள் வழியாகவும் இந்த பயணம் அழகாக அமையும்.

இங்கு காணவேண்டிய சுற்றுலாத்தளங்கள் ஏராளம்.

 மந்தோவி விரைவுவண்டி

மந்தோவி விரைவுவண்டி

கோவாவிலிருந்து மும்பை செல்லும் இந்த விரைவு ரயிலின் பாதை மிகவும் சிறப்பாக அமையும். இந்த வழித்தடத்தில் செல்லும்போது வரும் சுற்றுலாத்தளங்கள்

இமாலயராணி

இமாலயராணி


கல்க்கா - சிம்லா வழித்தடத்தில் செல்லும் இமாலயராணி ரயில் மலைகளில் எறும்பு ஊர்வதைப்போல் செல்லும், பார்ப்பதற்கு கண்கவர் விருந்தாக அமையும்.

 தீவு விரைவுவண்டி

தீவு விரைவுவண்டி

கண்கவர் காட்சிகளுடன் கடற்கரை மற்றும் காடுகள் வழியாக செல்லும் ரயில் தீவு விரைவுவண்டி கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வழியாக செல்லும். குமரியிலும், திருவனந்தபுரத்திலும் எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.

 ஜம்மு விரைவு வண்டி

ஜம்மு விரைவு வண்டி

53கிமீ வரையிலான தொலைவு நீளும் ஜம்மு - உதம்பூர் எக்ஸ்பிரஸ் இமாலய மலைவரையில் செல்லும். இங்கு 20 சுரங்கங்களையும், 158 பாலங்களையும் கண்டுகொண்டே பயணிக்கலாம். காம்பிர் பாலத்தில் அப்படியொரு அழகான காட்சியை காணமுடியும்.

ரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்

 டார்ஜிலிங்க் - இமாலய ரயில் வண்டி

டார்ஜிலிங்க் - இமாலய ரயில் வண்டி

மணிக்கு 12கிமீ வேகத்தில் காடுகளூடே பயணிக்கும் இந்த ரயிலில் செல்லும்போது மிகவும் புத்துணர்ச்சியாக உணரமுடியும். காலநிலையும், குளிர்ச்சியான உணர்வும் நம்மை ஏசி அறையில் இருப்பதைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்தும். சில சமயங்களில் அதிக குளிர்ச்சியும் இருக்கும்.
.

ரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்

டெல்லி- ஜெய்சல்மர் விரைவுவண்டி

டெல்லி- ஜெய்சல்மர் விரைவுவண்டி

ஆல்வார், ஜெய்ப்பூர் வழியாக செல்லும் இந்த வண்டி இரவு கடந்து காலையில் ஜோத்பூரை அடையும். விதவிதமான இடங்கள், கலைகள், கலாச்சாரங்கள்,வண்ணங்கள், மக்கள் என ஒரு கலைடாஸ்கோப் போல சிறப்பான வழித்தடமாக அமையும்.

ரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்

ஒரிசா டிரைபல் வண்டி

ஒரிசா டிரைபல் வண்டி


கோரப்பூட் முதல் ராயகடா வழியாக செல்லும் இந்த ரயில், இருள் மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக செல்கிறது. மலைகளில் பாயும் அருவிகளின் சத்தம் காதுகளில் கீச்சிடும் குயில்களின் ஓசையுடன் இணைந்து கேட்கும்.

ரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்

நீலகிரி மலைரயில்

நீலகிரி மலைரயில்

ஊட்டி மலைரயில் மேட்டுப்பாளையத்தையும், ஊட்டியையும் இணைக்கிறது. மணிக்கு 10கிமீ வேகத்தில் ஓடும் இந்த ரயில் பல சுரங்கங்களையும், பாலங்களையும் கடந்து செல்லும்.

ரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்

மாத்தேரன் மலைரயில்

மாத்தேரன் மலைரயில்

மகராஷ்ட்டிரா மலைவழி ரயில், 20கிமீ வேகத்தில் செல்லும். மொத்தம் ஒன்றரை மணி நேரம் பயணிக்கிறது இந்த ரயில்.

ரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்