Search
  • Follow NativePlanet
Share
» »நாம் செய்த தவறால் இந்தியாவிலிருந்து முற்றிலும் அழிந்து கொண்டிருக்கும் 10 இடங்கள்!!

நாம் செய்த தவறால் இந்தியாவிலிருந்து முற்றிலும் அழிந்து கொண்டிருக்கும் 10 இடங்கள்!!

By Bala Karthik

நெடுவாசல், கதிராமங்களம் என அரசு திட்டங்களால்  நம் வாழ்வாதாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர்போன இடங்கள் அழிக்கப்படுவதாக ஒருபுறம் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், மறுபுறம் உண்மையிலேயே நம் பாரம்பரியங்களின் அழிப்புக்கு யார் காரணம் என்றால் அது நம்மை நோக்கிய கைநீட்டலாகவே தொடர்கிறது. 

கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள், நிலப்பரப்புகள், மலைகள், கடற்கரைகள் என நிறைந்து காணப்படும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் மூலைகளும் ஒவ்வொரு கதையை சொல்லுமென்பதே உண்மை. இந்த கதைகள் வெளிப்படுத்தும் இடங்களின் வரலாறு, நம்மை பயணிக்க வைக்கவும் துடிக்கிறது. இருப்பினும், போதிய பராமரிப்பு அற்று இருப்பதோடு, இந்த இடங்களின் அருமையை மறந்து நினைவுசின்னங்கள் என்பதை நாம் மறந்திட, அழகிய பல பிரசித்திபெற்ற இடங்கள் மோசமான நிலையில் காணப்படுகிறது.

சில வருடங்களாக வரைபடத்திலிருந்து முற்றிலும் மறைந்துக்கொண்டிருக்கும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய இடங்கள் பல உண்டு. ஆனால், அதிர்ஷ்டவசமாக, இந்த ஆர்டிக்கலில் நீங்கள் பயணிப்பதன் மூலமாக, அக்கவலையை மறந்திட, இதோ உங்களால் முடிந்த அளவு சீக்கிரம் கிளம்ப ஏதுவாக மறைந்துக்கொண்டிருக்கும் அழகிய இடங்களின் பட்டியலை நாங்கள் உங்களுக்காக தர முயன்றிருக்கிறோம்.

 சிக்தன் கோட்டை, காஷ்மீர்:

சிக்தன் கோட்டை, காஷ்மீர்:

அழகிய கோட்டையான சிக்தன் கோட்டை, டிஸ்னி திரைப்படங்களை தழுவி பெரும்பாலும் காணப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையானது, வலிமையின் அடையாளமாக விளங்குவதோடு, போருக்கான முன்பிருந்த ஒற்றுமையையும் உணர்த்துகிறது. மலை உச்சியில் இந்த கோட்டையானது காணப்பட, அழகிய காட்சியால் கண்களை வெகுவாக கவர்கிறது.

 சிக்தன் கோட்டை,

சிக்தன் கோட்டை,

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது கைவிடப்பட, சிக்தன் கோட்டையானது கடுமையாக சீரழிந்து குறைவான பராமரிப்பை மட்டுமே கொண்டிருப்பதோடு, கால நிலையினாலும் கைவிடப்பட்டது. இருப்பினும், இந்த கோட்டையை இன்றும் நாம் காண முடிகிறதோடு, அதன் கிராமிய அமைப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

 ராக்கிகர்ஹி, ஹரியானா:

ராக்கிகர்ஹி, ஹரியானா:

நம் கவனத்தை ஈர்க்கும் இந்த ராக்கிகர்ஹி, ஹரப்பா நாகரிகத்தில் காணப்பட்ட ஐந்து பெரிய நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த தளமானது பரந்து விரிந்து ஐந்து திட்டாக ஒன்றோடொன்று காணப்பட, இரண்டில் பெருமளவில் மக்கள் வாழவும் பயன்படுத்தப்பட்டதாம்.

ராக்கிகர்ஹி

ராக்கிகர்ஹி

இந்தியாவின் தொல்லியல் துறையால் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட, இந்த நகரத்தில் அதி நவீன வடிகால் அமைப்பு பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததோடு, எரிந்த செங்கலை கொண்டும் இங்கே வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. சுடுமண், விலங்கு வரைபடம், செம்பு பொருள், முத்திரைகள் என பலவற்றை இந்த தளத்தில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போதிய பராமரிப்பு இல்லாதமையால், சூறையாடல் மற்றும் அலட்சியத்தின் காரணமாக, இந்தியாவின் அழிந்துக்கொண்டிருக்கும் ஓர் இடங்களுள் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

 மஜுலி, அசாம்:

மஜுலி, அசாம்:

அழகிய காட்சிகளால் சூழ்ந்த நதிகொண்ட தீவான இது, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று உலகத்திலே பெரியதாக காணப்படுமோர் நதி தீவாக இருக்க, அசாமில் இது அமைந்திருக்கிறது. எண்ணற்ற அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த பெயர் பெற்ற இந்த தீவானது, பிரம்மபுத்திரா நதியை தழுவி காணப்படுகிறது.

Dhrubazaan Photography

 மஜுலி

மஜுலி

ஆனால், இந்த நதி தீவானது பத்து முதல் இருபது வருடங்களுக்குள் மூழ்கிப்போக, அதுவும் நதியால் ஏற்பட்ட அரிமானத்தினாலே என்றும் தெரியவருகிறது. வெள்ளம் மற்றும் நில நடுக்கம் கடந்த காலத்தில் ஏற்பட, இந்த தீவு பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. இந்த அமிழ்த்துவதை எதிர்த்து பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, இருப்பினும் அவை பயனற்று இந்த தீவானது எதிர்காலத்தில் இருக்காது என்னும் கவலையான செய்தியையும் தாங்கிக்கொண்டு அமைந்திருக்கிறது.

Kalai Sukanta

 டெச்சன் நாம்க்யால் மடாலயம், ஜம்மு & காஷ்மீர்:

டெச்சன் நாம்க்யால் மடாலயம், ஜம்மு & காஷ்மீர்:

பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த டெச்சன் நாம்க்யால் மடாலயம், திபெத்திய புத்த மதத்தின் ட்ருக்பா காஹ்யுவை சார்ந்தது. இதனை ‘கொம்பா' என்றும் அழைக்க, இந்த மடாலயமானது 14,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. லடாக்கின் பழமையான வணிக பாதையை இதற்கு பயன்படுத்தப்பட, சௌகரியமான புள்ளியாகவும் இது அமைவதோடு, கட்டிடக்கலையின் பெருமையையும் இவ்விடம் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.

Jan Reurink

 டெச்சன் நாம்க்யால் மடாலயம்

டெச்சன் நாம்க்யால் மடாலயம்

இன்று இந்த மடாலயம் சீரழிந்து காணப்பட, அதற்கு காரணம் போதிய நிதி ஆதரவும், இதனை பாதுகாப்பதன் முக்கியத்தை உணராமல் நாம் சென்றதே என்பதும் தெரியவருகிறது. இருப்பினும், ஜம்மு & காஷ்மீருக்கு வரும் நாம், கண்டிப்பாக கொம்பாவை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

Stephen Shephard

 கிர் தேசிய பூங்கா, குஜராத்

கிர் தேசிய பூங்கா, குஜராத்

:

ஆசிய சிங்கங்களுக்கு வீடாக இந்த கிர் காணப்பட, 1975ஆம் ஆண்டு இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது என்றும் தெரிய வருகிறது. ஆசிய சிங்கங்களுக்கு பெயர்பெற்ற இந்த பூங்கா, நாற்பது வகையான பாலூட்டி இனத்திற்கும், எண்ணற்ற தாவர மற்றும் விலங்குகளுக்கும் வாழ்விடமாகவும் விளங்குகிறது.

vaidyarupal

கிர் தேசிய பூங்கா,

கிர் தேசிய பூங்கா,


ஆனால், இந்த கம்பீரமிக்க சிங்கங்கள் குறைய, IUCNஇற்கு கீழே, இந்த பூங்காவை அழிந்துவரும் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. அதோடுமட்டுமல்லாமல், எண்ணிக்கையிலும் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதால், இந்த பூங்காவானது இலையுதிர்காடுகளாக மாறிக்கொண்டு வருகிறது. ஒருவேளை இந்த பக்கம் வந்தால், கம்பீரமான காட்டு விலங்குகளை பார்த்து பரவசமடைந்து திரும்புங்கள்.

vaidyarupal

 பல்பக்ரம் காடு, மேகாலயா:

பல்பக்ரம் காடு, மேகாலயா:

பள்ளத்தாக்குகள் சூழ்ந்திருக்கும் இந்த பல்பக்ரம் காடு, அழகிய காட்சிகளை கொண்டு பீடபூமியையும், பசுமை போர்த்திய இடங்களாலும் நிரம்பியுள்ளது. ‘காரோக்கள்' எனப்படும் உள்ளூர் பழங்குடியினருக்கு இந்த காடு வீடாக, இந்த காட்டை ஓய்வெடுப்பதற்காக அவர்கள் உபயோகிப்பதோடு, தங்களது ஆத்மாவாகவும் காட்டை நம்புகின்றனர்.

Hgm2016

 பல்பக்ரம் காடு

பல்பக்ரம் காடு

விரிவுபடுத்தப்பட்ட நிலக்கரி சுரங்கம் மற்றும் மலையை சாகுபடிக்கு பயன்படுத்த தொடங்க, இந்த காடு வேகமாக அழிந்துக்கொண்டு வருகிறது. மேலும், இந்த காடுகளில் வாழும் உயிரினங்களும் அழிந்துக்கொண்டு வர, அறிவிக்கப்பட்ட தேசிய பூங்கா அதிகமான மனித நடமாட்டத்தினால் மறைந்துக்கொண்டும் வருகிறது.

James Gabil Momin

 பவள பாறைகள், இலட்சத்தீவுகள்:

பவள பாறைகள், இலட்சத்தீவுகள்:

அழகிய பவள பாறைக்கு பெயர் பெற்ற இலட்சத்தீவு, சாகச விளையாட்டுக்களான ஆழ்கடல் நீச்சலையும் கொண்டிருக்கும் ஓர் இடமாகும். இங்கே காணப்படும் பள்ளங்கள் பெரிதும் நம்மை ஈர்த்திட, பறவையினமும் உணவை தேடி இங்கே வருகிறது.

PoojaRathod

 பவள பாறைகள்

பவள பாறைகள்

சமீபத்தில் பாறைகளை பற்றி படித்திட, பவள சுரங்கத்தினால் இது அழிந்துக்கொண்டு வருவதையும் நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது. அதோடுமட்டுமல்லாமல், மீன்பிடி வெடிப்புகள், மற்றும் நீர் நிலை ஏற்றத்தினாலும் கூட இவ்விடம் மறைந்துகொண்டு வர இதற்கு காரணம், க்ளோபல் வார்மிங்க் என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

PoojaRathod

 பிட்டர்கனிகா சதுப்பு நிலங்கள், ஒடிசா:

பிட்டர்கனிகா சதுப்பு நிலங்கள், ஒடிசா:

மாபெரும் மாநிலமான ஒடிசாவில் இந்த சதுப்பு ஈர நிலமானது காணப்பட, வெள்ளை முதலைகள், இந்திய மலைப்பாம்புகள், கருப்பு இபிஸ் என பல இனங்கள் அழிந்துக்கொண்டு வரும் ஒரு இடமெனவும் இது தெரியவருகிறது. இந்தியாவில் காணப்படும் இரண்டாவது பெரிய சத்துப்பு நிலமாக இது இருக்க, 1988ஆம் ஆண்டு இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

AbhipshaRay93

 பிட்டர்கனிகா சதுப்பு நிலங்கள்

பிட்டர்கனிகா சதுப்பு நிலங்கள்

மனித நடமாட்டத்தின் அதிகரிப்பாலும், அத்துமீறலாலும், இந்த பகுதி நிலங்கள் மற்றும் மரங்கள் குறைந்துக்கொண்டு வருகிறது. மக்கள் உள்ளே நுழைவதற்கு லஞ்சம் கொடுத்து விதிகளை மீறுவதாகவும் காவல் இருப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

AjitK332

 கோதி, உத்தர பிரதேசம்:

கோதி, உத்தர பிரதேசம்:

உத்தர பிரதேசத்தின் க்வ்லா மஹமுதாபாத்தின் கோதி, பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட நினைவு சின்னமாகும். ஆவதி கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற இந்த கட்டிடம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க, 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் இந்த தளம் சிதைக்கப்பட்டது. இருப்பினும், அதன் அசல் அடித்தளத்தை கொண்டு மீண்டும் இந்த கட்டிடம் கட்டப்பட்டது.

 கோதி

கோதி

ஆனால், 67,000 அடி பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த தளத்தை பராமரிப்பது அவ்வளவு எளிதல்ல. இத்தகைய காரணத்தினால், கம்பீரமான இந்த கோட்டை மோசமாக காணப்படுகிறது.

 இமாலய பனிப்பாறைகள்:

இமாலய பனிப்பாறைகள்:

பெருந்தன்மைமிக்க இமயமலை உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்று விளங்க, இதன் காட்சிகள் நம்மை பெருமூச்செறிந்து பார்க்க வைப்பதோடு மலை மூடிய பனி சூழ்ந்த நிலப்பரப்பும் வெகுவாக நம்மை கவர்கிறது. இந்த கம்பீரமான மலை, உயர்ந்த பனிப்பாறைகளுக்கு உறைவிடமாக இருக்க, அவற்றுள் மௌன்ட் எவரெஸ்ட், சியாச்சன் பனிப்பாறை, என பலவும் அடங்கும்.

Sam Hawley

 இமாலய பனிப்பாறைகள்

இமாலய பனிப்பாறைகள்

உலக வெப்பமயமாதல் அதிகரித்ததன் விளைவால், இந்த பனிப்பாறைகள் உருக தொடங்கி உறைவிடத்தை இழக்க தொடங்கியுள்ளது. இதனை பற்றி மேலும் நாம் தெரிந்துக்கொள்ள, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த பனிப்பாறைகள் 13 சதவிகிதம் சுருங்கி காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Sam Hawley

Read more about: travel hills

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more