Search
  • Follow NativePlanet
Share
» »உத்தரகண்ட் குறித்த பத்து அசர வைக்கும் உண்மைகள்

உத்தரகண்ட் குறித்த பத்து அசர வைக்கும் உண்மைகள்

By Udhaya

இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலமானது மிகவும் அழகானதாகவும், உலகெங்கிலும் இருந்து பல சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாகவும் இருக்கிறது. பூலோகத்தில் இருக்கும் சொர்க்கம் என்றே அழைக்கும் அளவுக்கு மிகச் சிறந்த பல அருமையான இடங்களைக் கொண்டுள்ளது. அந்த இடங்களைப் பற்றி பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள பத்து விசயங்கள் நிச்சயம் உங்களுக்கு புதுமையானதாகவும், உத்தரகண்ட் மாநிலத்தைப் பற்றி நீங்கள் நினைத்திருந்தவற்றை பொய்யாக்குபவனவாகவும் அமையும். அப்படி என்னதான் இருக்கிறது இந்த மாநிலத்தில்.... வாங்க பாக்கலாம். மறக்காம மேல இருக்குற பெல் பட்டன அழுத்தி சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க..

நந்தா தேவியில் அபாயக் கதிர்கள்

நந்தா தேவியில் அபாயக் கதிர்கள்

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் போட்டியில் சில ஆயுதங்கள் கருவிகளைக் கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் சில சமயங்களில் இங்கு பேசப்படும் ஒரு விசயம் நம்மை அச்சுறுத்துகிறது. அது இங்கு கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக கூறப்படுவதுதான்.

இங்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஒரு கருவியில் புளூட்டோனியம் காப்சூல் தொலைந்துவிட்டதாம். அதனால்தான் இந்த கதிர்வீச்சு இருப்பதாக கூறப்படுகிறது.

Anaimudi22

இந்த கோவிலுக்குள் யாருக்கும் அனுமதி இல்லை

இந்த கோவிலுக்குள் யாருக்கும் அனுமதி இல்லை

லட்டு டேவ்டா கோவிலுக்குள் பூசாரிக்கே அனுமதி இல்லையாம். அட உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டம் வான் கிராமத்தில் இருக்கும் இந்த கோவிலுக்குள் இந்த கோவில் பூசாரியே போகமாட்டாராம். அட ஆச்சர்யமா இருக்குல.. வெளிய இருந்துதான் பூசை எல்லாம். வருடத்தில் ஒரு முறை மட்டுமே தூரத்திலிருந்து இந்த கோயிலுக்கு பக்தர்கள் வழிபட அனுமதி இருக்கிறதாம்.

நந்தாதேவி ஆன்மீக நடைபாதை

நந்தாதேவி ஆன்மீக நடைபாதை

உலகின் மிக நீளமான ஆன்மீக நடைபாதை நந்தா தேவி கோயிலுக்கு செல்லும் பாதைதான். குமவோன் மாவட்டத்தில் இருக்கும் இந்த மக்களின் முக்கிய தெய்வமாக இருக்கும் இந்த நந்தா தேவி கோயிலுக்கு நடைபயணம் செய்யும் பக்தர்கள் 230 கிமீ தூரம் நடந்து வருவார்களாம். இது பழங்காலக் கதை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இத்தனை கிமீ தூரம் நடந்து வர ஒரு வாரம் வரை எடுத்துக்கொள்வார்கள் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். பின்னாளில் இது யாராலும் பின்பற்றப்படாமல் போய்விட்டது எனறாலும் அந்த நடைபாதை அப்படியே உள்ளது.

Karnrawat

400 வயது கொண்ட நீர் பாதை

400 வயது கொண்ட நீர் பாதை

மாதோ சிங் பந்தாரி எனும் மாமனிதர் பல்வேறு இதயங்களை வென்றவராவார். தெஹ்ரி மாவட்டத்தின் மலேதா கிராமத்துக்கு இவர் செய்த ஒரு விசயம்தான் இவரை இத்தனை உயரத்துக்கு உயர்த்தியுள்ளது. நானூறு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இன்றளவும் சிறப்பாக உள்ளது இந்த நீர் வாய்க்கால்.

euttarakhand.com

450 மனிதர்களை கடித்து கொன்ற கொடூரன்

450 மனிதர்களை கடித்து கொன்ற கொடூரன்

450 பேரை கடித்தே கொன்ற கொடூரன். இத்துடன் இதில் பலரை சாப்பிட்டவிட்டது அந்த கொடூரன். அட அது புலி. சம்பாவத் காட்டில் நடமாடிய ஒரு பெண் புலி 450 பேரை கொன்றிருக்கிறது. இது கின்னஸ் புத்தகத்திலேயே இடம் பெற்றுள்ளது என்பது சிறப்பு. ஆனால் அந்த 450 பேரின் குடும்பம்தான் பாவம்.

அருகாமை கிராமங்களில் வாழும் மக்களை தினம் தினம் கொல்லுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது இந்த புலி, பின் பல்வேறு படைகளை வைத்து இந்த புலியை பிடிக்கத் திட்டமிட்டனர். கடைசியில் சுட்டு பிடிக்கப்பட்டது இந்த புலி.,

அதிகாரப்பூர்வ மொழி

அதிகாரப்பூர்வ மொழி

உத்தரகண்ட்டின் மொழி இந்தி என்றே நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மாநிலத்தில் இன்னொரு மொழியும் இருக்கிறது. சமக்கிருதம். ஆனால் அந்த அளவுக்கு யாரும் சமக்கிருதம் பேசும் ஆள்கள் இல்லை என்பதுதான் இதில் சுவாரசியமே. இங்கு சமக்கிருதம் படிக்க தெரிந்தவர்கள் என அவ்வளவு பேர் இல்லை. ஆனால் அதிகாரப்பூர்வ மொழியாக சமக்கிருதம் இருக்கிறது கோயில்களில் பூசை செய்வதற்கு பயன்படும் மொழிதான் சமக்கிருதம்.

wiki

லம்பி தேஹார் சுரங்க மர்மம்

லம்பி தேஹார் சுரங்க மர்மம்

வித்தியாசமான சுற்றுலாத் தளங்களைப் பற்றி பேசும்போது, நமக்கு பல இடங்கள் மனதுக்குள் வந்து போகும். அதே நேரத்தில் உலகத்திலேயே மிகப் பயங்கரமான இடங்களுள் ஒன்றான லம்பி தேஹார் சுரங்கம் பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. முசூரியிலிருந்து பத்து கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தில் 50 ஆயிரம் பேர் வேலை செய்யும்போது இறந்துவிட்டதாகவும், அதன் பின்னர் இந்த சுரங்கம் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் அருகாமையில் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களின் கருத்துப்படி அடிக்கடி இங்கு கூட்டமாக நிறைய பேர் சேர்ந்து அலறும் சத்தம் கேட்பதாகவும், திடீரென் ஆயிரம் பேர் வந்து முன் நின்று போராடுவது போல தோன்றுவதாகவும் கூறுகின்றனர்.

பூக்களால் உருவான பள்ளத்தாக்கு

பூக்களால் உருவான பள்ளத்தாக்கு

உலகின் திசைகள் எட்டு என்று வைத்துக்கொள்வோம். எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணுக்கு இனிதாக பல்வேறு வண்ணங்களில் அழகிய மலர்கள் கொத்துக்கொத்தாக இதழ் விரித்து உங்கள் மனதை கொள்ளை கொண்டால் என்ன செய்வீர்கள்.

அப்படி ஒரு இடம் உத்தரகண்ட்டில் இருக்கிறது. ஆம். உத்தரகண்ட்டின் பூக்களின் பள்ளத்தாக்குதான் அது. வேலி ஆப் பிளவர் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த இடம் மிகவும் அழகானது. எல்லா நிறத்திலும் பூக்கள் காணப்படுகிறது.

இந்த பகுதி ஆங்கில அதிகாரியான ஹோல்ஸ்வொர்த்தால் கண்டுபிடிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு மலையேற்றப் பயணம் மேற்கொண்ட இவர் கொத்துக் கொத்தாய் பூக்கள் நிறைந்த மலைகளுக்கு இடையில் இருந்த இந்த இடத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டார், தன் குடும்பத்தினரிடம் இது பற்றி கூறினார். பின்னர் இது நாளடைவில் சுற்றுலா பிரதேசமானது. 1988ம் ஆண்டு இதை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.

Tapuu

ரூப்கண்ட் ஏரியில் மிதக்கும் லட்சம் தலைகள்

ரூப்கண்ட் ஏரியில் மிதக்கும் லட்சம் தலைகள்

ரூப் குண்ட் ஏரியைப் பற்றி நீங்கள் எங்கேயாவது கேள்விப் பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இதன் முக்கியமான விசயம் என்ன தெரியுமா?

இங்கு மிதக்கும் மனித தலைகள் தான். பல ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் தலை எலும்புக்கூடுகள் இங்கு மிதந்து கிடக்கின்றன. இவை இந்த இடத்தை மிகப் பயங்கரமானதாக மாற்றியுள்ளன.

பெரும்பாலும் இங்கு நூற்றுக்கணக்கான தலைகள் இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை என்று கூறுகிறார் உள்ளூர் நபர் ஒருவர். ஆம், லட்சக்கணக்கான மனித மண்டை ஓடுகள் இங்கு கிடப்பதாக கூறி நம்மை அதிர வைக்கிறார். பலர் அதை எடுத்துச் சென்றுவிடுவார்களாம். பல மண்டை ஓடுகள் மண்ணில் புதைந்துவிட்டனவாம்.

Schwiki

 கேதார்நாத் வெள்ளப்பெருக்குக்கு யார் காரணம்

கேதார்நாத் வெள்ளப்பெருக்குக்கு யார் காரணம்

2013ம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி 5000க்கும் அதிகமான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். நாடு முழுவதும் இந்த விசயம் பெரும் அளவில் பேசப்பட்டது. இதனால் பலர் தங்கள் உறவினர்களை இழந்து வாடினர். அப்போது இந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது. அதாவது கேதார்நாத் பகுதியிலிருந்த தாரி அம்மன் கோயில் நகர்த்தப்பட்டதே இந்த பேரழிவுக்கு காரணம் என்பது.

அலகந்தா ஆற்றில் குடிகொண்டிருக்கும் தேவி கோயிலை இங்கிருந்து மாற்றிவிட்டனர் இதனாலேயே வெள்ளம் ஏற்பட்டதாக கருதுகின்றனர் உள்ளூர் மக்கள். அவரின் கோபமே இத்தனை உயிரை காவு வாங்கியிருப்பதாக நம்புகின்றனர் அவர்கள்.

Aloak1

Read more about: travel uttarakhand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more