Search
  • Follow NativePlanet
Share
» »கோயம்புத்தூர்ல இருந்து வெறும் 100கிமீ குள்ள இத்தனை அழகிய இடங்களா?

கோயம்புத்தூர்ல இருந்து வெறும் 100கிமீ குள்ள இத்தனை அழகிய இடங்களா?

By Udhaya

கோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது நகரமான இது, பெருநகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பெரிய தொழில் துறை மையமான இந்த நகரம் "தென் இந்தியாவின் மேன்செஸ்டர்" என்று அழைக்கப்படுகிறது. கல்வி மற்றும் தொழில்மயமாக்கலில் கோயம்புத்தூர் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது.இருப்பினும் இந்நகரின் வண்ணமயமான கடந்தகால வரலாற்றை இன்றும் நம்மால் காண முடியும். தென் இந்தியாவின் மாபெரும் ராஜவம்சங்களான சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களாலும் கூட கோயம்புத்தூர் ஆளப்பட்டிருக்கிறது. இப்படி ஏகப்பட்ட வரலாற்று பொக்கிஷங்களை கொண்ட இந்த ஊருக்கு சுற்றுலா செல்வது என்பது சொர்க்கத்துக்கு செல்வதை போன்றது. இதன் அருகிலேயே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற பல சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. இவை தவிர 100 கிமீக்குள் சுற்றுலா செல்ல இன்னும் பத்து அருமையான இடங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

மலம்புழா அணை

மலம்புழா அணை

காணவேண்டிய சிறப்புகள் - ஏரியும், நீர் தொகுப்பும் , இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளும்

அருகிலுள்ள ரயில் நிலையம் - பாலக்காடு

தொலைவு - 9 கிமீ

கோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு -

பயண வசதிகள் - ரயில், பேருந்து, வாடகை வண்டிகள்

மலம்புழா பற்றிய சில தகவல்கள்

மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை, பயிர் செய்வதற்கு பயன்படும் நீரைச் சுமந்துகொண்டிருக்கிறது. இது கால்வாய்கள் வழியே திருப்பப்பட்டு பயிர்த்தொழில் நடைபெறுகிறது.

கேரளாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன அணையாக கருதப்படும் மலம்புழா அணை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த அணை பாலக்காடு நகரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. மலம்புழா அணையுடன் சேர்ந்து ஒரு கேளிக்கை பூங்காவும், அற்புதமான தோட்டம் ஒன்றும் அதன் பகுதிகளாக அறியப்படுகின்றன.

அதோடு மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையும், நீர்த்தேக்கமும் இப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகின்றன. இங்கு நீர் மின்சார திட்டம் 1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த அணையுடன் சிறிது காலத்திற்கு பிறகுதான் சேர்க்கப்பட்டன.

அவற்றில் படகுப் பயணம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலம். மேலும் மலம்புழா அணைக்கு நீங்கள் வரும் போது அணையின் அருகாமையில் அமைந்திருக்கும் மலம்புழா கார்டனுக்கு கண்டிப்பாக சென்று வர வேண்டும்.

Jeganila

 சிறுவாணி நீர்வீழ்ச்சி மற்றும் அணை

சிறுவாணி நீர்வீழ்ச்சி மற்றும் அணை

காணவேண்டிய சிறப்புகள் - சாகச பயணம், மலையேற்றம், நீர்வீழ்ச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர்

தொலைவு - 36 கிமீ

பயண வசதிகள் - பேருந்து , சுயவாகனம்

செலவழிக்கும் காலம் - 3 முதல் 4 மணி நேரங்கள்

கோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு -36கிமீ


சிறுவாணி பற்றிய சில தகவல்கள்

கோவை குற்றாலம் கோயம்புத்தூர் அருகிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். பல அடுக்குகள் கொண்ட நீர்வீழ்ச்சியின் ரம்மியமான தோற்றம் இங்கு காணக் கிடைப்பதால் இது புகழ் பெறுகிறது. இந்த அருவி சிறுவாணி ஆற்றிலிருந்து பிறக்கிறது. இந்த சிகரம் கோயம்புத்தூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதியாக உள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் எளிதில் அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சிறுவாணி அணை இந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் தான் கட்டப் பட்டுள்ளது. இந்த அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களின் நிர்வாகத்திற்கு வனத்துறையே பொறுப்பு.

கோவை குற்றாலத்தைக் காண வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். நகரிலிருந்து இங்கு வர குறிப்பிட எண்ணிக்கையிலான பேருந்துகளே உள்ளன. ஐந்து மணிக்கு மேல் இங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் குறிப்பிட்ட சமயத்திற்கு முன்பாகவே இந்த இடத்தைப் பார்வையிட வேண்டும்.

VasuVR

 மங்களம் அணை

மங்களம் அணை

காணவேண்டிய சிறப்புகள் - ஏரியும், நீர் பின்புலமும், கண்ணுக்கினிய பசுமை சுற்றுலாவும்

அருகிலுள்ள ரயில் நிலையம் - பாலக்காடு

தொலைவு - 41 கிமீ

பயண வசதிகள் - பேருந்து, சுயவாகனம்

செலவழிக்கும் காலம் - 2 மணி நேரங்கள்

கோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 95 கிமீ

மங்களம் அணை பற்றிய சில தகவல்கள்

பாலாக்காடு நகரத்திலிருந்து 41 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த அணை. இது செருக்குன்னப்புழா நதியின் மேல் கட்டப்பட்ட அணை ஆகும். பாலாக்காட்டுக்கு அருகே இருக்கும் அழகிய பசுமை சுற்றுலா இதுதான்.

ஆலத்தூர் - வடக்கன்சேரி நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் காட்டு பகுதியில்தான் இந்த அணை உள்ளது. இங்கு மான்கள், யானைகள் முதலிய விலங்குகளை காணலாம்.

Fayaz29

 டாப் ஸ்லிப்

டாப் ஸ்லிப்

காணவேண்டிய சிறப்புகள் - சாகசபயணம், மலையேற்றம், மலைப்பகுதி உலா, காட்டுயிர் வாழ்வு

அருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர்

தொலைவு - 76 கிமீ

பயண வசதிகள் - கார், பேருந்து, சுய வாகனம்

செலவழிக்கும் காலம் - ஒரு நாள் முழுவதும்

கோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 76 கிமீ

டாப்ஸ்லிப் பற்றிய சில தகவல்கள்

கோயம்புத்தூரிலிருந்து 76 கிமீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது இந்த டாப்ஸ்லிப். சொல்லப்போனால் பலருக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது. சுற்றுலாவை நேசிக்கும் வெகு சிலரே இது பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2554 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த டாப்ஸ்லிப் குன்னூர் அளவுக்கு சிறப்பானது.

சேத்துமடை எனும் இடம்தாண்டிதான் இந்த டாப்ஸ்லிப் பகுதிக்கு செல்லமுடியும். இது 5 கிமீ தொலைவுக்கு முன் வருகிறது.

Marcus Sherman

மீன்கரை அணை

மீன்கரை அணை

காணவேண்டிய சிறப்புகள் - ஏரியும், காணக்கிடைக்காத நீர் பின்புலமும்....

அருகிலுள்ள ரயில் நிலையம் - பாலக்காடு

தொலைவு - 39 கிமீ

பயண வசதிகள் - பேருந்து மற்றும் சுய வாகனம்


செலவழிக்கும் காலம் - 2 முதல் 3 மணி நேரம் அங்கு நாம் கழிக்கலாம்

கோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 92கிமீ

மீன்கரை அணை பற்றிய சில தகவல்கள்

பாலாக்காடு நகரத்திலிருந்து 39 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இது மிக அழகிய பிக்னிக் தளம். புகைப்படம் எடுக்கவும், காற்று வெளியில் காலார நடை போடவும் சிறந்த இடமாகும்.

பாரதப் புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

இங்கு பயிர் விவசாயம் மற்றும் தென்னை விவசாயத்துக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.

புதுநகரம், பால்லசானா மற்றும் கொல்லங்கோடு வழியாக எளிதில் இந்த இடத்தை அடையமுடியும்.

nmsachin

 அமராவதி அணை

அமராவதி அணை

காணவேண்டிய சிறப்புகள் - ஏரி, நீர் பின்புலம், பசுமை சுற்றுலா

அருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர்

தொலைவு - 90 கிமீ

பயண வசதிகள் - பேருந்து சுய வாகனம்

செலவழிக்கும் காலம் - ஒரு நாள் முழுவதும்

கோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 90 கிமீ

அமராவதி அணை பற்றிய சில தகவல்கள்

கோயம்புத்தூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 50 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த அணை. இது இந்திரா காந்தி காட்டுயிர் பாதுகாப்பு நிலையத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

இது அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை ஆகும். இந்த அணையில் முதலைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. நூற்றுக்கும் அதிகமான முதலைகள்.

கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சிக்கு உடுமலைப் பேட்டை வழியாக செல்லும்போது இந்த இடத்தை காணமுடியும். பேருந்து வசதிகளும் இருக்கின்றன.

Jaseem Hamza

 வைதேகி நீர்வீழ்ச்சி

வைதேகி நீர்வீழ்ச்சி

காணவேண்டிய சிறப்புகள் - சாகசப் பயணம், மலையேற்றம், நீர்வீழ்ச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர்

தொலைவு - 35 கிமீ

பயண வசதிகள் - பேருந்து சுய வாகனம்

செலவழிக்கும் காலம் - அரை நாள்

கோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 35 கிமீ

வைதேகி அணை பற்றிய சில தகவல்கள்

இந்த அணை கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 35 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 533 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள இடம் நரசி புரம் ஆகும்.

இது அழகிய காட்சிகளையும், பசுமையான இடங்களையும் கொண்டுள்ள இடமாகும்.

சாலைப் பகுதியிலிருந்து 5 கிமீ தூரம் பயணித்து நீர்வீழ்ச்சியை அடைய முடியும். வாடகை வண்டிகள் அல்லது சுய வாகனம் மூலமாகத்தான் இந்த நீர்வீழ்ச்சியை அடையமுடியும்.

VasuVR

 குரங்கு நீர்வீழ்ச்சி

குரங்கு நீர்வீழ்ச்சி

காணவேண்டிய சிறப்புகள் - இயற்கை சுற்றுலா, நீர்வீழ்ச்சி


அருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர்

தொலைவு - 67 கிமீ

பயண வசதிகள் - பேருந்து மற்றும் சுய வாகனம்

செலவழிக்கும் காலம் - 1 முதல் 2 மணி நேரங்கள்

கோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 67 கிமீ

ஆழியார் அணைக்கு அருகே அமைந்துள்ள இடம் இது. இங்கிருந்து ஆழியார் அணை 5 கிமீ தொலைவில் இருக்கிறது.

பொள்ளாச்சியிலிருந்து 27 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழச்சிக்கு வால்பாறைக்கு சுற்றுலா வரும் மக்கள் வந்து செல்கின்றனர்.

Siva301in

 மீன்வள்ளம் நீர்வீழ்ச்சி

மீன்வள்ளம் நீர்வீழ்ச்சி

காணவேண்டிய சிறப்புகள் - நீர்வீழ்ச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் - பாலக்காடு

தொலைவு - 30 கிமீ

பயண வசதிகள் - கார் பேருந்து

செலவழிக்கும் காலம் - 3 முதல் 4 மணி நேரங்கள்

கோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 83 கிமீ

மீன்வள்ளம் நீர்வீழ்ச்சி பற்றிய சில தகவல்கள்

பாலக்காட்டிலிருந்து 30 கிமீ தொலைவிலும் கோயம்புத்தூரிலிருந்து 77 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, அழகிய 5 அடுக்கு அருவி ஆகும். இது பாலக்காட்டின் கரிம்பா நகருக்கு அருகே அமைந்துள்ளது.

துப்பனாடு சந்திப்பு பகுதியிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Zuhairali

லாஸ் நீர்வீழ்ச்சி

லாஸ் நீர்வீழ்ச்சி

காணவேண்டிய சிறப்புகள் - நீர்வீழ்ச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர், குன்னூர்

தொலைவு - 10 கிமீ

பயண வசதிகள் - வாடகை வாகனம்

செலவழிக்கும் காலம் - 2 முதல் 3 மணி நேரம்

கோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 43

லாஸ் நீர்வீழ்ச்சி பற்றிய சில தகவல்கள்

10 கிமீ தொலைவில் குன்னூரும், 26 கிமீ தொலைவில் ஊட்டியும் அமைந்திருந்தாலும், இந்த இடம் அதிகம் பேர் பார்வையிடாத இடங்களில் ஒன்றாக இருக்கிறது. 30 அடி உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி பாய்கிறது.


Shankarkarthikeyan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X