» »கோவா டூர் போனா எதுலாம் அணியக்கூடாது தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க

கோவா டூர் போனா எதுலாம் அணியக்கூடாது தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க

Posted By: Udhaya

அதிகம் படித்தவை: விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

இந்தியாவுல பொறந்த பல பேருக்கு தங்கள் மனம் கவர்ந்த ஒரு இடம் இருக்கும். அங்க இதுவரைக்கும் போனதே இல்லைனாலும், என்னைக்காவது ஒரு நாள் போய்டணும்னு துடியா துடிச்சிட்டு இருப்போம்.

அதுலயும் குறிப்பா தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு... பன்னிரெண்டாவது தேர்வுகள்லாம் முடிஞ்சதுமே பசங்க கூட சேர்ந்து கோவா போகலாம்னு திட்டம் தீட்டினவங்கள்ல நீங்களும் இருக்கீங்கதான.. நானும்தான்.. இன்னிக்கு வர கோவா பக்கம் கூட போகல..

பன்னிரண்டாவது படிக்கும்போது, பொறியியல் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டுனு கடைசி வர கோவா போறோம் ங்குற பேர்ல கேரளாவுக்கும், பெங்களூருக்கும் வந்து மனச தேத்திக்கிட்டது தான் மிச்சம்..

நீங்க எப்படி... கோவா போக தயாராகிட்டீங்களா? நீங்க கோவா போறதுலாம் சிக்கல் இல்ல... ஆனா அங்க சில சமாச்சாரங்கள போடக்கூடாதுனு உங்களுக்கு தெரியுமா? அததான் சொல்லவந்துருக்கோம் வாங்க!

உண்மையான பாகுபலி மகிஸ்மதி இங்கதான் இருக்குதாம்? வாங்க !

தண்ணிக்கடியில நோ அண்டர்வியர்

தண்ணிக்கடியில நோ அண்டர்வியர்

நீச்சல் உடைகள் வேறு.. அண்டர்வியர் என்பது வேறு... உள்ளாடைகள் அணிந்து கடலில் இறங்க வேண்டாம்..

சும்மா நாங்களும் கோவா போறோம்னு கிளம்பி வந்துட்டு உள்ளாடையோட குளிச்சிட்டு இருந்தீங்கன்னா... நீங்க மட்டும் தனியா தெரிவீங்க பாத்துக்கோங்க..

ஸ்டூல் போன்ற ஹைஹீல்ஸ் கூடவே கூடாது

ஸ்டூல் போன்ற ஹைஹீல்ஸ் கூடவே கூடாது

சும்மா ஆறடி உயரத்துக்கு ஆச பட்டமாதிரி காலில் ஒரு ஸ்டூல் ஹீல்ஸ் போட்டுட்டு போகாதீங்க கேர்ள்ஸ்.. எதுக்கு தேவையில்லாம உங்க பாதத்துக்கு டார்ச்சர்.. ப்ஃரீயா இருங்க..

குரங்கு மாதிரி மேக் அப் போடக்கூடாது

குரங்கு மாதிரி மேக் அப் போடக்கூடாது

இருக்குற அழகு போதாதுனு கூடவே ஆறெட்டு அடுக்குல மேக் அப் போடாதீங்க.. சும்மாவே உப்பு காத்துக்கு மேக்அப் நிக்காது.. இதுல கோவாவுக்கு போனீங்க.. அப்பறம் குரங்குக்கு உங்களுக்கும் வித்தியாசம் தெரியாம போயிடும்.

தோல் பொருள்களை தவிருங்கள்

தோல் பொருள்களை தவிருங்கள்

அடிக்கிற வெயில்ல தோலால் செய்யப்பட்ட பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.. அதையும் மீறி போட்டுதான் ஆவேன்னா... அப்றம் சூரியபகவானும் வாயு பகவானும் உங்க உடல் உஷ்ணத்த ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி எடுப்பாங்க பாத்துக்கோங்க..

ஷூக்களுக்கு சூமந்திரகாளி

ஷூக்களுக்கு சூமந்திரகாளி

நீங்க திருமண விழாவுக்கோ, அலுவலக சந்திப்புக்கோ வராத வரைக்கும் ஷீக்களுக்கு லீவு விட்டுடுங்க.. மணல் மேல பாதம் பட்டவாறு நடக்குறதுதானுங்களே உண்மையான கடற்கரை அனுபவமா இருக்கும்.. யோசிங்க

Zalman992

சாக்ஸுக்கு நோ

சாக்ஸுக்கு நோ

ஷீ வே இல்ல சாக்ஸூ அப்படினு சொல்றீங்களா.. சிலர் செருப்புக்கே சாக்ஸ் போடுறாங்களே பாஸ்.. சும்மா மண்ணு படும், தூசு படும்னு நினைக்காம கடல் அலைகள காலில் அனுபவிங்க பாஸ்..

ஆயில் நாட் அலோட்

ஆயில் நாட் அலோட்

நீச்சல் குளத்துக்குலாம் நம்ம ஊருல இருக்குற மாதிரி தலை நிறைய எண்ணெய் அப்பிக்கிட்டு போனீங்கன்னா கழுத்த புடிச்சி வெளிய தள்ளிடுவாங்க.. அதுமட்டுமில்லா கடற்கரையில் எண்ணெய்யோட போன கசகசனு வராது... சரிதானே

கண்ணாடி போன்ற உடைகள்

கண்ணாடி போன்ற உடைகள்

கண்ணாடி போன்ற உடைகள் அணிந்து போனீங்கன்னா அப்றம் என்ன நடக்கும்னு நாங்க சொல்லி தெரியவேண்டியதில்ல.

கப்பலேறி போயாச்சே... மானமும் மரியாதையும்..

ஹேர் ஜெல்லுக்கு நோ சொல்லிடுங்க

ஹேர் ஜெல்லுக்கு நோ சொல்லிடுங்க

என்னபாஸ் இங்கயும் வந்து ஹேர் ஜெல்லு, ஹேர் டிரையர்னு. சும்மா விடுங்க பாஸ் கடற்காத்து பட்டிச்சினா சும்மா ஹீரோ ஹேர்ஸ்டைல் வந்துடும்.. முடிய இயற்கையா அதன்போக்குலயே விட்டுடுங்க..

Namastê... ॐ

ஆபரணங்களை முடிந்த வரை தவிருங்கள்

ஆபரணங்களை முடிந்த வரை தவிருங்கள்

நீங்க கோவாவுக்கு உங்க வீட்டுல இருக்குறவங்க திருமணத்துக்கு போகுறமாதிரி அணிகலன்கள் அணிந்து போனீங்க அப்படின்னா...

அணிகலன்களுக்கும் கேரண்டி இல்ல... உங்க அவஸ்தைக்கும் வாரண்டி இல்ல.. உங்களுக்கு தெரியும்தான!

Read more about: travel goa

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்