Search
  • Follow NativePlanet
Share
» »அழகிய மான் இனங்களை கண்டு ரசிப்பதற்கு ஏற்ற இந்தியாவின் முக்கியமான 10 வனவிலங்கு பூங்காக்கள்

அழகிய மான் இனங்களை கண்டு ரசிப்பதற்கு ஏற்ற இந்தியாவின் முக்கியமான 10 வனவிலங்கு பூங்காக்கள்

இந்தியாவில் ஏராளமான வனவிலங்க பூங்காக்கள் இருந்தாலும் ஒரு சில விலங்குகளை காண குறிப்பிட்ட சில இடங்களுக்கு தான் செல்ல வேண்டும். இந்த பூங்காக்கள் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தருகின்றன. அப்படி அழகிய மான் கூட்டங்களை கண்ட ரசிக்க இந்தியாவில் எந்தெந்த வனவிலங்கு பூங்காக்களுக்கு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Deers

காசிரங்கா தேசிய பூங்கா

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய பூங்கா, உலகின் மிகப்பெரிய ஒற்றை கொம்பு மான் கூட்டத்தைக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற இயற்கை அருங்காட்சியகம் ஆகும்.யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சரளி மான்கள் ஸ்வாம்ப் டியர் (Swamp Deer) என்றழைக்கப்படும் இனம் இங்கு அதிகம். இந்த பூங்காவில் சதுப்பு நில மான்கள் மற்றும் பன்றி மான்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

சுந்தரவன தேசிய பூங்கா

சுந்தரவன தேசிய பூங்கா, இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற உயிரியல் பூங்காவாகும். இது உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் காடுகள் கொண்ட பகுதியாகவும் உள்ளது.இது அரிய வகை புள்ளிமான்களின் தாயகம் ஆகும். இவை பெரும்பாலும் அடர்ந்த காட்டிலும், நீர் ஓரங்களிலும் காணப்படுகின்றன.

ரந்தம்போர் தேசிய பூங்கா

ரந்தம்போர் தேசிய பூங்கா இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற வனவிலங்கு காப்பகமாகும். இங்கு அதிக எண்ணிக்கையிலான புள்ளி மான்கள் மற்றும் சாம்பார் மான்கள் உள்ளன. இவை நீர்நிலைகளுக்கு அருகில் மேய்வதை கண்டு ரசிக்கலாம்.ரந்தம் போர் இந்தியாவின் சிறந்த பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கியோலாடியோ தேசிய பூங்கா

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பஹரத்பூர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பறவை சரணாலயம் ஆகும். இங்கு அரிய வகை கலைமான்களை அதிகளவில் காணலாம்க. பூங்காவின் ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பு விலங்குகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது.

Deers

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஜிம் கார்பெட் சிட்டல், சாம்பார் மற்றும் அழிந்து வரும் இனமான கஸ்தூரி மான் போன்ற மான் இனங்களுக்கு ஒரு புகலிடமாகும்.ஜீப் சஃபாரி, யானை சஃபாரி, வனப்பகுதியை யானையில் சுற்றி வரலாம், இது சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

தாடோபா தேசிய பூங்கா

தாடோபா தேசிய பூங்கா மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்த்ராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் பழமையான தேசிய பூங்காவாக விளங்குகிறது.அதிகாலை நேரங்களில் அடிக்கடி காணப்படும் புள்ளி மான்கள் மற்றும் சாம்பார் மான்கள் கூட்டங்களை காண தாடோபா ஒரு சிறந்த இடமாகும்.இது சிறந்த வ்யூ பாயிண்ட் அனுபவம், இயற்கை அழகு, மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கான சிறந்த இடமாக விளங்குகிறது.

நந்தா தேவி தேசிய பூங்கா

நந்தா தேவி தேசிய பூங்கா இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடமாக (அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான பூங்கா ஆகும். இங்கு இமயமலை கஸ்தூரி மான், இமயமலை மஸ்க் டியர் போன்ற உயிரினங்கள் காணப்படுகின்றன.பனி மூடிய மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், மற்றும் புல்வெளிகள் இதன் இயற்கை அழகிற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

Deers

மானஸ் தேசிய பூங்கா

மானஸ் தேசிய பூங்கா இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய பூங்காவாகும். இங்கு .சம்பார் மான் , மற்றும் சிலை மான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அதிக அபூர்வமான விலங்குகள் மற்றும் உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன.

பெரியார் தேசிய பூங்கா

கேரளா மாநிலத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்தியாவின் முக்கியமான வன உயிரியல் காப்பகங்களில் ஒன்று ஆகும். இங்கு இந்திய மான் , மலை மான் மற்றும் புள்ளி மான் இனங்கள் உள்ளன.சரணாலயத்தின் கரையில் மேய்ச்சல் நிலத்தில் உள்ள மான்களை பார்க்க, ஏரியில் படகு சவாரி செய்து பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.

பந்திப்பூர் தேசிய பூங்கா

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான வன உயிரினக் காப்பகம் ஆகும். பசுமையான மலைகளும், அடர்ந்த வனங்களும் சூழ்ந்த ஒரு அழகிய சுற்றுலா இடமாகவும், முக்கியமான புலிகள் மற்றும் யானைகள் காப்பகமாகவும் விளங்குகிறது. சாம்பார் மான், புள்ளி மான் கூட்டங்கள் அதிகளவில் உள்ளன. இது புலிகள், யானைகள், மான்கள், மற்றும் அபூர்வ விலங்குகளின் சொர்க்கம் ஆக விளங்குகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+