Search
  • Follow NativePlanet
Share
» »வாவ் என வாயை பிளக்க வைக்கும் தென்னிந்தியாவின் 12 அழகு கொஞ்சும் சாலைகள் இவைகள் தான்

வாவ் என வாயை பிளக்க வைக்கும் தென்னிந்தியாவின் 12 அழகு கொஞ்சும் சாலைகள் இவைகள் தான்

தென்னிந்தியாவிற்கு வரும் பலரும் முதலில் முன் வைக்கும் குற்றச்சாட்டு ரோடு சரியில்லை என்பது தான். இன்னும் சிலர் ரோடு டிரிப் என்றாலே போரடிக்கும் என்பார்கள். இப்படி நினைப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் கண்டிப்பாக ஒருமுறை இந்த 12 சாலைகளில் பயணம் செய்து விட்டு வாருங்கள். இயற்கை அழகை ரசித்த படியே, மகிழ்ச்சியான, உல்லாசமான ஒரு சாலை பயணத்தை அனுபவிக்க நினைப்பவர்கள் அவசியம் இந்த சாலைகளில் பயணிக்க வேண்டும்.

road trips in South India

மதுரை - தனுஷ்கோடி சாலை

இந்த அழகிய பாதையில் பயணிகள் பசுமையான நிலப்பரப்புகளுடன் கூடிய இந்தியாவின் தென்முனையில் உள்ள தனுஷ்கோடி வரை செல்லலாம். தனுஷ்கோடி ஒரு கோஸ்ட் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. பழமையான கட்டிடங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது. இந்த சாலை பயணம் வரலாற்று ஆய்வுடன் கூடிய அமைதியான அனுபவத்தை வழங்குகிறது. இரு புறமும் கடல், நடுவில் செல்லும் சாலையில், இந்தியாவின் தென்கோடி முனை வரை சென்று தொட்டு பார்க்கும் அனுபவமே தனி தான்.

சென்னை - புதுச்சேரி சாலை

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு செல்ல பல ரூட்கள் உள்ளன. இருந்தாலும் ஒருமுறை கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஒரு ரோடு டிரிப் போய் வாருங்கள். வங்காள விரிகுடாவின் அழகிய காட்சிகளை கண்டு ரசித்தபடியே பயணிக்கும் இந்த அனுபவத்தை வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது. கடற்கரையை ஒட்டியே அமைந்த இந்த சாலையில் பயணிப்பதே மனதிற்கு ஒரு இதமான மகிழ்ச்சியை தரும்.

road trips in South India

மதுரை - கொடைக்கானல் சாலை

மதுரையில் இருந்து கொடைக்கானல் வரை சாலையில் பயணம் செய்யும் போது இருபுறமும் கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமை, வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளின் அழகு ஆகியவற்றை அனுபவிக்க முடியும். அழகிய அமைதியான நிலப்பரப்புகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகிய நகரங்களை காணலாம். சாலை வழியாக கொடைக்கானல் மலையேற்றத்தில் செல்லும் பொழுது ரம்மியமான இயற்கை காட்சிகளை அனுபவித்து ரசிக்கலாம்.

கோயம்புத்தூர் - ஊட்டி சாலை

கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலை பயணம் மூன்று மணி நேரங்கள் கொண்டதாகும். பயணம் செய்யும் வழியில் உள்ள பசுமையான மலைகள் அழகான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறுவாணி நீர்வீழ்ச்சி, குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற இடங்களின் வழியாக பயணம் செய்யும்போது ஒரு புத்துணர்ச்சியை உணர முடியும்.

சேலம் - ஏற்காடு சாலை

சாகச பயணம் மேற்கொள்வோருக்கு சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலை சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை தரும். ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் அழகிய காட்சிகளைக் கொண்டது. ஏற்காட்டில் உள்ள காப்பி தோட்டங்கள், இனிமையான காலநிலை மற்றும் அழகான ஏரி மிகவும் பிரபலமானவை. இது ஓய்வு எடுக்கவும், ஆய்வு செய்வதற்கும் ஏற்ற இடம் ஆகும்.

திருச்சி - தஞ்சாவூர் சாலை

வரலாற்று சிறப்புமிக்க கோயில்களுக்கு பெயர் பெற்ற திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை அருமையான ஆன்மீக அனுபவத்தை வழங்கக் கூடியதாகும். இங்கு சிறப்பு மிக்க பல கோவில்கள் உள்ளதால் அதிகமான கோவில்களுக்கு சென்று திரும்பி உணர்வை தரும். மேலும் சாலை வழியாக பயணம் செய்து யுனெஸ்கோ அமைப்பால் பட்டியலிடப்பட்ட கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலை சென்று பார்வையிட்டு அங்குள்ள வரலாற்று சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திருநெல்வேலி - நாகர்கோவில் சாலை

இருபுறமும் பசுமையான தோட்டங்கள், வயல்கள், மலைகள் என பசுமையால் சூழப்பட்ட இந்தப் பாதை குடும்ப பயணத்திற்கு ஏற்றது. இது தமிழ்நாட்டின் கிராமப்புற அழகின் காட்சிகளை காட்டும் சாலை பயணமாக இருக்கும். சாலை வழியாக சென்றால் பல கோயில்களுக்கும் சென்று விட்டு. நீர்வீழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் சுற்றுலா தளங்களையும் சென்று காண முடியும்.

கேப்சாலை - மூணாறு

கேப்சாலையில் கேரளாவின் பனி மூடிய தேயிலை தோட்டங்களின் வழியாக வாகனம் ஓட்டுவது ஒரு இதமான அனுபவமாக இருக்கும். அதன் அற்புதமான காட்சிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களின் குறுகிய பாதை புகைப்படம் எடுப்பதற்கும், வித்தியாசமான மலைப்பாதை அனுபவத்தை பெறுவதற்கும் ஏற்றதாகும்.

கொச்சி - கன்னியாகுமரி

இந்த கடற்கரை சாலை பயணம் இந்தியாவின் தென்முனைக்கு பயணம் செய்ய உகந்ததாகும். இந்த பயணத்தில் அரபிக் கடலின் அழகிய காட்சிகள், அழகான மீன்பிடி கிராமங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டுக் கொண்டே செல்ல ஏதுவாக இருக்கும்.

ஐதராபாத் - அரக்கு பள்ளத்தாக்கு சாலை

ஐதராபாத்தில் இருந்து அரக்கு பள்ளத்தாக்கு வரை செல்லும் சாலை பயணம் சுமார் 700 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த நீண்ட பயணத்தில் அழகான கடற்கரை காட்சிகள், மலை வாசஸ்தலங்கள் உட்பட பல்வேறு நிலப்பரப்புகளை கடந்து ரசித்தபடி செல்லலாம். மேலும் அங்குள்ள காபி தோட்டங்களுக்கு பெயர் பெற்ற அரக்கு பள்ளத்தாக்கிற்கு சென்று அங்குள்ள கலாச்சாரங்களைப் பற்றி அறியலாம்.

பெங்களூரு - கூர்க் சாலை

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் பெங்களூருவில் இருந்து கூர்க் வரை செல்லும் சாலை, உருளும் மலைகள், மூடுபனி நிறைந்த நிலப்பரப்புகள் மற்றும் காப்பி தோட்டங்கள் நிறைந்த அழகிய பகுதி. கூர்க் அதன் இயற்கை அழகு, உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மலையேற்றம் போன்றவற்றை அனுபவிக்க ஓர் சிறந்த இடம்.

வயநாடு - கூர்க் சாலை

மேற்கு தொடர்ச்சி மலைகளின் வழியாக மேற்கொள்ளப்படும் இந்த பயணம் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை அளிக்கிறது. வயநாடு மற்றும் கூர்க் இரண்டும் வனவிலங்கு சரணாலயங்கள், நீர்வீழ்ச்சிகள், சாகசங்களால் நிறைந்துள்ளன. இது சுற்றுலாவிற்கு ஏற்ற பகுதியாக அமைகிறது.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+