» »இன்னும் சில ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் அழியப்போகும் அற்புத இடங்கள் இவை!

இன்னும் சில ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் அழியப்போகும் அற்புத இடங்கள் இவை!

Written By: Vinubala Jagasirpiyan

இந்தியாவில் உள்ள பல இடங்கள் தனித்துவம் மிக்கதாக விளங்குகிறது, உதாரணத்திற்கு ஹம்பியில் வருங்கால தலைமுறைக்காக அழிவின் விளிம்பில் இருக்கும் இடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதே போல், பல வனவிலங்கு சரணாலயங்களும் கர்நாடகாவில் உள்ள பண்திபூர் தேசிய பூங்கா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயம் போன்ற வனவிலங்குகளை காப்பாற்ற முன்வந்துள்ளன. இதனால் இரவு 9:00 மணி முதல் மறு நாள் காலை 6:00 மணி வரை வாகனங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஸ்தலங்கள்:

இங்கே சில இடங்கள் பாதுகாக்க படவேண்டும், அதன் அழகு மீட்க பட வேண்டும், நம் எதிர்கால தலைமுறைகளுக்காக நாம் அதை செய்ய வேண்டும்.

இங்கே குறிப்பிட பட்டிலும் இடங்கள் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை, இவை கூடிய விரைவில் அழிய பல வாய்ப்புகள் உள்ளது.

1. ராக்கிகர்ஹி, ஹரியானா - சிந்து சமவெளியில் இருந்த மிக பெரிய நகரம்:

1. ராக்கிகர்ஹி, ஹரியானா - சிந்து சமவெளியில் இருந்த மிக பெரிய நகரம்:

ஹரியானா மாவட்டத்தில் ஹிஸரில் உள்ள ராக்கிகர்ஹி ஓவுறு தொல்பொருள் ஆய்வாளர்களின் கனவாகும். இதை 1963 ஆம் ஆண்டு சிந்து சமவெளியில் மிக பெரிய நகரம் என கண்டுபிடித்தனர். மொஹெஞ்சோடரோ மற்றும் ஹாரப்பாவில் உள்ள தளங்களைவிட இது பெரிது என்று கூறப்படுகிறது.

மூன்று வருடங்கள் ஆராயப்பட்ட இந்த இடம், 1997 ஆம் ஆண்டு போதிய நன்தொகை இல்லாததால் முடிவிற்கு வந்தது. சரியான பாதுகாப்பு இல்லாத இந்த இடத்தில இருந்து பல பண்டையப் பொருள்கள் திருடப்பட்டு விற்கப்படுகின்றது.

PC : Nomu420

3. சுந்தர்பன் - மேற்கு வங்கம் - சதுப்பு நிலக் காடுகளின் வீடு:

3. சுந்தர்பன் - மேற்கு வங்கம் - சதுப்பு நிலக் காடுகளின் வீடு:

இயற்கை மற்றும் வனவிலங்கு விரும்பிகளுக்கு சுந்தர்பன் டெல்டா உலகிலையே மிகவும் உற்சாகமான ஓர் இடம். சதுப்பு நிலக் காடுகள் மற்றும் அழிவை நோக்கி செல்லும் மேற்கு வங்க புலிகளுக்கும் ஒரு வீடாக சுந்தர்பன் நிகழ்கிறது. தாழ்வான பகுதியில் இருக்கும் இந்த டெல்டா, தண்ணீரில் மூழ்கும் பெரும் அபாயத்தில் உள்ளது. அது மட்டுமல்லாது, உலக வெப்பமயத்தாலும், கடல் சீற்றத்தாலும் கூடிய விரைவில் சுந்தர்பன் டெல்ட்டாவை புகைப்படங்களில் மட்டுமே பார்க்க கூடிய அவல நிலைமை உண்டாகிவிடும் என அஞ்சப்படுகிறது.

PC : V Malik

4.சிம்லா சிவிக் சென்டர் - ஹிமாச்சல் பிரதேஷ் - கோலோனியல் வரலாற்றின் அழகிய முகம்:

4.சிம்லா சிவிக் சென்டர் - ஹிமாச்சல் பிரதேஷ் - கோலோனியல் வரலாற்றின் அழகிய முகம்:

பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட காலத்தில் சிம்லா கோடைகால விடுதியாகவே அவர்கள் கவனத்தை ஈர்த்தது. இங்கு பிரிட்டிஷ் மக்கள் கோலோனியல் பாணியில் பல கட்டிடங்களை எழுப்பினர், இதுவே இவ்விடத்திற்கு தனித்துவமான தோற்றத்தை தருகிறது. காலங்கள் கழிந்தன, பிரிட்டிஷ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர், சரியான தொலைநோக்கு பார்வை இல்லாததாலும், சீரான பராமரிப்பு திட்டம் இல்லாததாலும், கோலோனியல் மலை நகரம் இந்த திட்டமினமைக்கு பலியாகி கொண்டு இருக்கிறது என்றே கூறலாம். சிவிக் சென்டர் உலகில் உள்ள அழிவை நோக்கி செல்லும் முக்கியமான நான்கு நினைவு சின்னங்களில் ஒன்று என கூறப்படுகிறது.

PC : sushmab

5. தேச்சேன் நம்கயல் மடத்தில் - ஜம்மு அண்ட் காஷ்மீர் - ஆன்மிகத்திற்கு ஓர் கோட்டை:

5. தேச்சேன் நம்கயல் மடத்தில் - ஜம்மு அண்ட் காஷ்மீர் - ஆன்மிகத்திற்கு ஓர் கோட்டை:

இந்த பிரமாண்டமான புத்தமட அரண்மனை 17 ஆம் நூற்றண்டு எழுப்பப்பட்டது. இது லடாக் வர்த்தக சாலையில் லடாக்கி ராஜா செங்கே நம்கயலால் திபெத் பூசாரி அறிவுரையின் கீழ் கட்டப்பதாகும்.


இந்த இடத்தை அடைவது சிரமமாகவே இருக்கிறது, இதனால் இந்த அரண்மைனையயை சீர் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். தேசேனில் வழிபடும் பத்து துறவிகளும் ஹன்லே கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்களால் முடிந்த அளவிற்கு இவ்விடத்தை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர்.

PC : Dave Kleinschmidt

6. ஜெய்சல்மெர் கோட்டை, ராஜஸ்தான் - நவீனத்துடன் போராடும் ஓர் கம்பீரமான கட்டிடம்:

6. ஜெய்சல்மெர் கோட்டை, ராஜஸ்தான் - நவீனத்துடன் போராடும் ஓர் கம்பீரமான கட்டிடம்:

உலகில் உள்ள மிக பிரமாண்டமான அரண்மனைகளில் ஒன்றானது ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மெர் கோட்டை. ராஜஸ்தானியர்களுக்கு இது ஒரு கர்வமாகவே திகழ்கிறது. இதில் ஆச்சிரயமான ஒரு அங்கம் என்னவென்றால் இக்காலத்திலும் அரண்மனையின் வாயிலின் உள்ளே சில குடும்பங்கள் வாழ்கின்றன. இதுவே இங்கே பல சுற்றுலா பயணிகளை கவர்கிறது.
உயர்த்து வரும் மக்கள் தொகையாலும், நவீன கட்டிட கலையாலும் இந்த 12 ஆம் நூற்றாண்டு அரண்மையனை சீரழிந்து வருகிறது, எனவே இதுவும் வேகமாக அழிந்து வரும் நினைவு சின்ன பட்டியலில் கூடிய விரைவில் இடம் பிடித்து விடும் என்று தெரிகிறது.

PC : Adrian Sulc

7. மேற்கு தொடர்ச்சி மலை - மனிதனும் இயற்கையும்:

7. மேற்கு தொடர்ச்சி மலை - மனிதனும் இயற்கையும்:

மேற்கு தொடர்ச்சி மலைகள் தனது பச்சை தன்மைக்கும், இந்தியாவில் உள்ள மேற்கு கடலோர பகுதிகளுக்கும் பேர் போனது என்றே கூறலாம். பல வகை விலங்குகளுக்கும் செடிகளுக்கும் ஓர் வீடாக உள்ளது. இங்கே வாழும் ஆதிவாசி அல்லது பழங்குடியினர் என்று அழைக்கப்படுவோர் , பல நூற்றாண்டுகளாக இங்கே தனித்து வசித்து வருகின்றனர். முன்னேற்றம் என்ற பெயரில் இங்கே கட்டப்படும் கட்டிடங்களும் செய்யப்படும் நவீனங்களும் இவ்விடத்தை கொஞ்சம் கொஞ்சமாக அளித்து கொண்டு வருகின்றது. மும்பை- புனே நெடுஞ்சாலை மலைகளின் நடுவே செல்வதாலே அங்கு இருக்கும் பல்லுயிர் வளங்களை பாதிக்க படுகின்றது.
PC : Karunakar Rayker

8. பால்பக்ரம் காடு மேகாலயா- ஓர் சொர்க பூமி:

8. பால்பக்ரம் காடு மேகாலயா- ஓர் சொர்க பூமி:

மேகலாயாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பால்பக்ரம் தேசிய பூங்கா காரோ பழங்குடியினரின் இருப்பிடமாகும். அங்கே இருக்கும் புராணங்களில் இது ஆன்மாக்கள் சரணடையும் இடம் என குறிப்பிட்டுள்ளது. சுற்று சூழல் ஆய்வாளர்களுக்கு இவ்விடம் ஓர் வரப்பிரசாதம். இந்த இயற்கை பள்ளத்தாக்கில் பல வன விலங்குகள் உள்ளன நீர் எருமை, சிவப்பு நிற பாண்டா மற்றும் பல வகையான காட்டு பூனைகள் இவையெல்லாம் இங்கு காணப்படும் விலங்குகள். நீர் அணைகளும் நிலக்கரி சுரங்ககளும் விரித்து கொண்டே போவதால் வனப்பகுதி மெல்ல மெல்ல அழிந்து கொண்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் அணைத்து விலங்கினமும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

PC : wikipedia.org

9. பவள பாறைகள், லக்ஸ்வதீப் - இந்தியாவில் இருக்கும் ஒரே பவள பாறை:

9. பவள பாறைகள், லக்ஸ்வதீப் - இந்தியாவில் இருக்கும் ஒரே பவள பாறை:

லக்ஸ்வதீப்பின் ஆள் கடலுக்கு சென்று இருக்கீர்களா? அப்படி சென்று இருந்தால் அங்கே இருக்கும் அழகான பவள பாறைகள் பற்றி கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அதீத மீன் பிடித்தல், பவள சுரங்கங்கள் மற்றும் வலி மாறுததால் இங்குள்ள பவள பாறைகள் அழிந்து வருகின்றன. அது மட்டும் அல்லாது உயர்ந்து வரும் கடல் மட்டத்தாலும் இந்த அறிய பவள பாறைகளின் எதிர்காலம் இருண்டு போவதை கண் கூடாக பார்க்கலாம்.

PC : Vaikoovery

10. மஜூலி, அசாம் - ஆற்றினால் உருவாகிய ஓர் மிக பெரிய தீவு:

10. மஜூலி, அசாம் - ஆற்றினால் உருவாகிய ஓர் மிக பெரிய தீவு:

அஸ்ஸாமின் மேல் பகுதியில் உள்ள, மஜூலி இந்தியாவில் உள்ள வளங்கள் மிக்க இடங்களில் ஒன்றாகும். யானைகள், மான்கள், முயல்கள் மற்றும் பல வகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் சரணாலயமாக இவ்விடம் திகழ்கின்றது. இதில் சோகம் என்னவென்றால் சுமார் 483 கிமி பரப்பளவில் இருந்த இந்த இடம் இப்பொழுது 421 கிமி பரப்பளவாக சுருங்கி விட்டது. இதற்கு காடு அழிதல்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனெனில் மரம் வெட்டுவதால் உண்டாகும் மண் அரிப்பால் தான் மஜூலிக்கு இந்த நிலைமை. சில கணக்கெடுப்பில் இதே நிலைமை நீடித்தால் 15 முதல் 20 வருடங்களில் மஜூலி வரலாறு ஆகிவிடும் என்று சுட்டிகாட்டப் பட்டுள்ளது.

PC : Peter Andersen

11. மலர்களின் பள்ளத்தாக்கு, உத்தரகாண்டு - இது கண்டிப்பாக மலை ஏறுபவர்களுக்கு மட்டும்:

11. மலர்களின் பள்ளத்தாக்கு, உத்தரகாண்டு - இது கண்டிப்பாக மலை ஏறுபவர்களுக்கு மட்டும்:

உத்தரகாண்டில் உள்ள மலர் பள்ளத்தாக்கு மிகவும் அழகானது, இதனால் இங்கே பல சுற்றுலாவாசிகள் குவிகின்றனர். அனால் இதுவே இந்த இடத்திற்கு ஒரு பெரிய ஆபத்து. ஓர் மலை ஏறும் இடத்திற்கும் ஒரு சுற்றுலா தளத்திற்கும் மிக சிறிய இடைவெளியே உள்ளது ஆனால் இந்த இடைவெளி தற்போது இந்த மலர்களின் பள்ளத்தாக்கில் காணாமல் போய்விட்டது.

12. கசிரங்கா , அசாம் - மக்கள் குறைவு ஆனால் காண்டாமிருகங்கள் அதிகம்:

12. கசிரங்கா , அசாம் - மக்கள் குறைவு ஆனால் காண்டாமிருகங்கள் அதிகம்:

காண்டாமிருகங்கள் அசாமிற்கு பெருமை சேர்ப்பதாக அமைகிறது. ஆனால் இதற்கு முரண்பாடாக இங்கு வசிக்கும் மக்களே இந்த அரிய உயர் இனத்திற்கு எமனாகி விட்டார்கள். ஒரு கட்டத்தில் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை ஏராளமாக இருந்தது, சொல்லப்போனால் மற்ற விலங்குகளுக்கு நிகராகவே இருந்தது.

ஆனால் தற்பொழுது 3000 விலங்குகள் மட்டுமே உயிருடன் இருக்கின்றன என கூறப் படுகின்றது. மக்கள் தேசிய பூங்காக்களின் அருகில் குடியேறுவதால், அதன் பரப்பளவும் குறைந்து கொண்டே வருகின்றது. மக்களின் தார்மிக உணர்வு காண்டாமிருகங்கள் தோலை விட கடினமாக உள்ளது என்றே தான் கூற வேண்டும்.

PC : Deepraj

13. ஹெமிஸ் தேசிய பூங்கா, ஜம்மு அண்ட் காஷ்மீர் - பனி சிறுத்தை தங்கும் இடம்:

13. ஹெமிஸ் தேசிய பூங்கா, ஜம்மு அண்ட் காஷ்மீர் - பனி சிறுத்தை தங்கும் இடம்:

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள ஹெமிஸ் தேசிய பூங்கா, அழிந்து கொண்டு வரும் பனி சிறுத்தையின் இருப்பிடம் ஆகும். சுமார் 200 - 600 பனி சிறுத்தைகள் இன்னும் இந்த இடத்தின் உயர் பகுதிகளில் சுற்றி கொண்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இங்கே செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் கட்டாயம் இந்த அழிந்து வரும் இனத்தை காண வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே நீங்கள் கடைசி முறையாக பனி சிறுத்தைகளை பார்ப்பதாகவும் இருக்கலாம்.

PC : Kashmir Wildlife Protection Dept

14. சாசன் கிர் காடு, குஜராத் - புலிகளின் காப்பிடம்:

14. சாசன் கிர் காடு, குஜராத் - புலிகளின் காப்பிடம்:

ஆசியா புலிகளின் வீடாக திகழ்கிறது சாசன் கிர் தேசிய பூங்கா அல்லது கிர் காடு என்று அழைக்கப்படுகிறது இவ்விடம். அழிந்து வரும் இந்த விலங்கின் எண்ணிக்கை இங்கு படி படியாக உயர்ந்து வருகின்றது. செயற்கையான கருவுருதல் மூலமாக இதை சாத்தியம் செய்த ஜூனாகதில் உள்ள சக்கர்ப மிருக காட்சிசாலைக்கு தான் நன்றி கூற வேண்டும்.
இங்கு இந்த இயற்கை சூழலை காப்பாற்ற பல இடங்களில் சுற்றுலாவாசிகளை அனுமதிப்பது இல்லை. எனினும் சில இடங்களில் வெளி ஆட்களை தொலைவில் இருந்த காண அனுமதி செய்கின்றனர்.

PC : Rupal Vaidya

15. யூலர் ஏரி, ஜம்மு அண்ட் காஷ்மீர் - சுருங்கும் ஏரி:

15. யூலர் ஏரி, ஜம்மு அண்ட் காஷ்மீர் - சுருங்கும் ஏரி:

யூலர் ஏரி உலகில் இருக்கும் அறிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும். இங்கு தொடர்ச்சியாக தண்ணீர் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது, இதனால் இங்கே வரும் சுற்றுலா வாசிகளுக்கு மற்றும் இங்கே வசிக்கும் மக்களுக்கும் இங்கே தண்ணீர் விளையாட்டுகள் பல உள்ளன. மாசு படிதலாலும் மீன் பிடிப்பதாலும் இந்த ஏரி சுருங்கிக்கொண்டு வருகின்றது. சுற்றி இருக்கும் இரண்டு மில்லியன் மரங்களை வெட்டி இதை சரி செய்யப் பார்க்கின்கிறனர் இந்த ஊர் உள்ளூர் வாசிகள். ஆனால் ஓர் இயற்கை வளத்தை காப்பாற்ற மற்றொன்றை அழிப்பது எந்த விதத்தில் சரியாகும் என்பதை யோசிக்க வேண்டும் என்பது என் கருத்து.

PC : Maxx786


அதிகம் பேர் படித்த டாப் 5 கட்டுரைகள்

திருமணத்துக்கு முன்னாடி நீங்க இதையெல்லாம் அனுபவிச்சே ஆகணும் பாஸ்

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் வீழ்ந்த இடம் எது தெரியுமா?

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

ஜெயலலிதாவும் கோடநாடும் தெரிந்ததும் தெரியாததும்


அமலா பாலுடன் நடுக்காட்டில் ஒரு சுற்றுலா போலாமா?