» »3 லட்சம் ஆண்டுகள் பழமையான குகைகள்!!!

3 லட்சம் ஆண்டுகள் பழமையான குகைகள்!!!

Posted By: Staff

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீம்பேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது ஆகும்.

இந்த குகைகள் யாவும் தெற்காசிய கற்காலத்தின் தொடக்கத்தினை குறிப்பதோடு, இங்கிருந்து கண்டறியப்பட்ட மனிதச் சுவடுகள்தான் இந்தியாவிலேயே பழமையானவையாக கருதப்படுகின்றன.

இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக திகழ்கின்றன.

இங்கு காணப்படும் 30, 000 ஆண்டுகள் பழமையான 'பாலியோலித்திக்' வகை ஓவியங்கள் அக்கால மக்களின் வேட்டை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன.

பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். அதாவது மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இந்த குகைகளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாண்டவர்களும், எலும்புக்கூடுகளும்!

பாண்டவர்களும், எலும்புக்கூடுகளும்!

மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் பீம்பேட்கா குகைகளில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இங்கு ஒருமுறை நடைபெற்ற தொல்லியல் ஆராய்ச்சியில் 6000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

படம் : Raveesh Vyas

ஆமைப்பாறை

ஆமைப்பாறை

பல்லாயிரம் ஆண்டுகளாக காற்றிலும், மழையிலும் கிடந்து இயற்கையாக ஒரு ஆமையின் வடிவத்தில் காட்சி தரும் பாறை.

படம் : Surohit

புத்த ஸ்தலம்

புத்த ஸ்தலம்

இந்திய தொல்பொருள் ஆவணக் கோப்புகளில் 1888-ஆம் ஆண்டு புத்த மத ஸ்தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

படம் : Nikhil2789

வேட்டைக்கு புறப்படுதல்

வேட்டைக்கு புறப்படுதல்

இந்த ஓவியம் கற்கால மனிதன் ஈட்டி முதலிய ஆயுதங்களோடு வேட்டைக்கு புறப்பட்டு செல்வதை குறிக்கிறது.

படம் : Raveesh Vyas

மனித முகம்

மனித முகம்

பீம்பேட்கா குகைகளில் உள்ள பாறைகள் எல்லாம் இயற்கையாகவே பல்வேறு வடிவங்களை பெற்று விளங்குகின்றன. அந்த வகையில் இந்தப் பாறை மனித முகத்தின் தோற்றத்தை ஒத்து காணப்படுகிறது.

படம் : Nikhil2789

அமைவிடம்

அமைவிடம்

பீம்பேட்கா குகைகள் மத்தியப்பிரதேச தலைநகர் போபாலிலிருந்து 45 கி.மீ தொலைவில், விந்தியாஞ்சல் மலைகளின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.

படம் : Nikhil2789

பசுமை

பசுமை

பீம்பேட்கா குகைகள் பசுமையான காடுகள் சூழ ஊற்று நீர், விலங்குகள் என்று இயற்கை எழில் கொஞ்சும் இடமாக திகழ்கிறது.

படம் : Sushil Kumar

வேட்டை ஓவியம்

வேட்டை ஓவியம்

கற்காலங்களில் வில், அம்பு, ஈட்டி முதலிய ஆயுதங்களைக் கொண்டு எப்படி மனிதன் மிருகங்களை வேட்டையாடினான் என்பதை விளக்கும் ஓவியம்.

படம் : Conscious

ஸ்பெயின் மற்றும் ஃபிரான்ஸிலும் இதே போன்ற பாறைகள்

ஸ்பெயின் மற்றும் ஃபிரான்ஸிலும் இதே போன்ற பாறைகள்

வி.எஸ். வாகன்கர் என்பவர் 1957-ஆம் ஆண்டு ரயிலில் போபால் செல்லும்போது பீம்பேட்கா பாறை வடிவங்களை கண்டு அவை ஸ்பெயின் மற்றும் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள சில பாறை அமைப்புகளோடு ஒத்துப்போவதை கண்டறிந்தார்.

படம் : Nikhil2789

மனிதனை வேட்டையாடும் மிருகம்

மனிதனை வேட்டையாடும் மிருகம்

பீம்பேட்கா குகைகளில் எண்ணற்ற வேட்டை ஓவியங்கள் காணப்பட்டாலும் அவை யாவும் மனிதன் ஆயுதங்கள் கொண்டு வேட்டையாடுவதை காட்சிப்படுத்தும் வேளையில, இந்த ஓவியம் மட்டுமே மனிதனை மிருகம் வேட்டையாடும் காட்சியை காட்டுகிறது.

படம் : Raveesh Vyas

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

பீம்பேட்கா குகைகள் இன்னும் பிரபலமாகாத சுற்றுலாத் தலமாக இருப்பினும் வரலாற்றில் ஆர்வமுள்ள பயணிகள் கணிசமான அளவில் இங்கு வந்து செல்கின்றனர்.

படம் : Nikhil2789

நுழைவாயில்

நுழைவாயில்

3 லட்சம் ஆண்டுகள் பழமையான பீம்பேட்கா குகைகளின் நுழைவாயில் இது.

படம் : Tanujdeshmukh

யுனெஸ்கோ ஸ்தலம்

யுனெஸ்கோ ஸ்தலம்

பீம்பேட்கா குகைகள் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் : Nikhil2789

ஆதிமனிதன்

ஆதிமனிதன்

பீம்பேட்கா குகைகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஆதிமனிதனின் தோற்றத்தை ஒத்த சிலை தற்போது வடிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

படம் : Nandanupadhyay

சில ஒப்பீடுகள்

சில ஒப்பீடுகள்

பீம்பேட்கா குகைகள் ஆஸ்திரேலியாவின் அழகிய கக்காடு தேசியப் பூங்காவோடு ஒப்பிடப்படுகிறது. அதோடு இதன் ஓவியங்கள் தொல்கால ஃபிரான்ஸ் நாட்டு சித்திரங்களை ஒத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

படம் : Nikhil2789

பாறை வாழிடங்கள்

பாறை வாழிடங்கள்

பீம்பேட்காவில் இதுவரை மொத்தம் 750 பாறை வாழிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 243 இடங்கள் பீம்பேட்கா தொகுதியையும், மீதமுள்ள 178 வாழிடங்கள் லக்கா ஜுவார் தொகுப்பையும் சேர்ந்தவை.

படம் : Nikhil2789

கோயில்

கோயில்

பீம்பேட்கா குகைகளின் அடிவாரத்தில் அமையப்பெற்றுள்ள கோயில்.

படம் : Nikhil2789

ஹோமோ எரக்டஸ்

ஹோமோ எரக்டஸ்

பீம்பேட்கா குகைகளில் கண்டெடுக்கப்பட்ட கற்கால மனிதனின் (Homo Erectus) மிச்சங்கள் உலக அளவில் தொல்பொருள் ஆராய்ச்சியில் அதிமுக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

படம் : Rakesh.roushan

டைம் மெஷின்

டைம் மெஷின்

நாம் கற்கால மனிதர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி புத்தகத்தில் தான் படித்திருப்போம். ஆனால் பீம்பேட்கா குகைகள் வரும் ஒவ்வொரு பயணியும் டைம் மெஷினில் ஏறி கற்காலத்துக்கே சென்றுவிடுவதுபோல் ஒரு மாயையை உணர்வது நிச்சயம்.

படம் : Nikhil2789

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

பீம்பேட்கா குகைகள் மத்தியப்பிரதேச தலைநகர் போபாலிலிருந்து 45 கி.மீ தொலைவிலேயே அமைந்திருப்பதால் சாலை, ரயில், விமானம் மூலம் சுலபமாக அடைந்துவிட முடியும். மேலும் டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில்கள் அதிக அளவில் போபாலுக்கு இயக்கப்படுவதோடு, போபாலிலிருந்து பீம்பேட்கா குகைகள் செல்வதற்கு எண்ணற்ற பேருந்துகளும் கிடைக்கின்றன.

படம் : Nikhil2789

Read more about: வரலாறு
Please Wait while comments are loading...