» »இந்தியாவில் கிறிஸ்துமஸ், நியூ இயர் தினங்களில் ஷாப்பிங் செய்ய ஏதுவான புகழ் பெற்ற 5 சிறந்த இடங்கள்!!

இந்தியாவில் கிறிஸ்துமஸ், நியூ இயர் தினங்களில் ஷாப்பிங் செய்ய ஏதுவான புகழ் பெற்ற 5 சிறந்த இடங்கள்!!

Written By: Bala Karthik

இந்த வருடத்தின் காலமானது கைக்கூட, பளப்பளக்கும் நட்சத்திரங்கள், ஒளியூட்டும் விளக்குகள், கொடிகளோடு இணைந்த கலைமான் கொம்புகள், வெள்ளை மற்றும் சிகப்பு நிற தொப்பிகள் என காணப்படுவது வழக்கமாகும். கொண்டாட்டத்திற்கான, பரிசு தரும் காலமாக இது அமைய, உங்கள் மனம் கவர்ந்த நபருக்கு என்ன பரிசு தரவேண்டும் என சிந்தனையை சிதரவிடுவதும் வழக்கமாக அமைகிறது.

ஆடம்பரமான அலங்கரிப்புகள் அல்லது ஒளியூட்டும் விளக்கென, தனிமையிலே இனிமை காணும் சாளரங்களை அழகுப்படுத்த, மாபெரும் கிருஸ்துமஸ் மரமும், நாட்டில் பல சந்தைகளில் விற்பனைக்கு வர, ஷாப்பிங்க் செய்வதன் மூலம் விளையாட்டு தனத்தை உங்கள் மனதில் பூர்த்தி செய்துக்கொண்டு கடை நோக்கியும் புறப்படக்கூடும்.

இங்கே இந்தியாவில் காணப்படும் சந்தைகளை நாங்கள் பட்டியலிட, அங்கே நிரம்பி வழியும் கிருஸ்துமஸ் பொருட்களையும் நாம் இப்போது பார்க்கலாம். சில மிருதுவான வெண்ணெய் கேக்குகள், வாசனைமிக்க குக்கீகள், என அதீத அனுபவத்தை பெறலாம் வாருங்கள்.

மும்பை:

மும்பை:

மும்பை கிருஸ்துமஸ் விருந்து என அழைக்கப்பட, வணிகத்தின் இந்தோ ஜெர்மன் அறையால் நடத்தப்படும் நகரத்தின் கிருஸ்துமஸ் சந்தையும் இங்கே காணப்படுகிறது. இந்த விருந்தின் மூலமாக இரு நாடுகளும் பொருளாதார ரீதியாகவும், சிறந்த கலாச்சாரம் பொங்கவும் காணப்படுகிறது. இதன் சூழல் மற்றும் காட்சியானது கிருஸ்துமஸ் ஷாப்பிங்கிற்கு சிறந்த இடமாக அமைகிறது.

இதனை கடந்து, பல்வேறு இடங்களில் பல நிகழ்வானது நகரம் முழுவதும் காணப்பட, அவை க்ராவ் போர்ட் சந்தை, குஃபே பராட், பந்த்ரா கிராமம், எல்பின்ஸ்டோன் கல்லூரி என பலவும் அடங்க, கிருஸ்துமஸுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சந்தைகளும் இங்கே காணப்படுகிறது.

PC: Davidlohr Bueso

 கொச்சி கோட்டை:

கொச்சி கோட்டை:

கிருஸ்துமஸ் காய்ச்சலானது வலுவாக இருக்கும் நிலையில், பல்வேறு திருவிழாக்களும், சந்தைகளும் காணப்பட, யூலிட் ஆத்மாக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு முன் காணப்படுவதாகவும் நம்பப்படுகிறது. கிருஸ்துமஸ் ஷாப்பிங்க் செய்வதற்கு சிறந்த இடங்களுள் ஒன்றாக கொச்சி காணப்பட, கூட்டத்தினருக்கு பிடித்தமான பொருட்களும் வரிசைக்கட்டி உங்களை வரவேற்கிறது.

இங்கே வரும் ஒருவரால், பல உள்ளூர் கடைகளை பார்த்திட முடிய, கடைத்தெரு சாலையின் குறுக்கே என, மரைன் ட்ரைவ்விலிருந்து மேனகா வரை காணப்படுகிறது. ஜீவ் தெருவும் மிகவும் புகழ்மிக்க சந்தையாக விளங்க, உள்ளூர் மற்றும் சுற்றுலாவினருக்கு பிடித்தமான அனைத்து பொருட்களும் சுற்றுப்புறத்தை சூழ்ந்து காணப்படுகிறது.

PC: Unknown

 கோவா:

கோவா:

கொண்டாட்டத்திற்கு ஏற்ற இடமாக கோவாவை தவிர வேறு எதை தான் நம் மனதில் முதலில் நிறுத்திவிட முடியும். இந்த மாநிலத்தின் கோவா விடுமுறையானது அஞ்சுனா பழைய பொருட்கள் கொண்ட புகழ்மிக்க சந்தைக்கு புதன் கிழமை செல்லாமல் மனம் திருப்தியடைவதில்லை என சொல்ல, ஒவ்வொரு வாரம் புதன் கிழமை இந்த சந்தை காணப்படுகிறது. இந்த சந்தையானது கிருஸ்துமஸுக்கு முன்பு நிரம்பி காணப்பட, மக்களால் விலை பேரம் பேசப்பட்டு பொருட்கள் வாங்கி செல்லவும் படுகிறது.

இங்கே வரிசைக்கட்டி நம்மை வரவேற்கும் பொருட்களாக உள்ளூர் கைவினை பொருளிலிருந்து, வாசனை பொருட்கள், ஆடைகள், செயற்கை அணிகலன்கள், உதிரி பாகங்கள் என பலவும் காணப்பட, அவை சிறந்த கிருஸ்துமஸ் பரிசாகவும் அமைகிறது.

இங்கே வரும் ஒருவரால், சந்தைகளான கலான்குட்டே, அர்போரா இரவு கடைத்தெரு, மற்றும் மர்கோவா ஆகியவை பார்க்கவும் பரிந்துரைக்கப்பட, இங்கே ஒரு சில சுவாரஸ்யமான கிருஸ்துமஸ் அலங்காரங்களோடு சேர்த்து பட்டு கவுன்கள், அணிகலன்கள், கைவினை பொருட்கள், மது, இரவு உணவு உண்ணும் போது அணியும் மேலங்கி, என பலவும் கிருஸ்துமஸ் பரிசாக நம் ஆத்மாவை ஆனந்தம் கொள்ள செய்கிறது.

PC: Unknown

 தில்லி:

தில்லி:


தலைநகரத்தின் இராஜதந்திர பகுதியாக சாணக்கியபுரி அமைய, இங்கே கிருஸ்துமஸ் சந்தைகளில் பொருளானது பகிரப்பட, அவற்றை பல்வேறு தூதரகங்களும் நடத்துகிறது. இந்த ஜெர்மன் மற்றும் ஆஸ்திரேலிய தூதரகங்கள் ஒவ்வொரு வருடமும் கிருஸ்துமஸ் சந்தையை மகிழ்ச்சி பொங்க ஏற்பாடு செய்ய, இதனை உள்ளூர் வாசிகளும், சுற்றுலா ஆர்வலர்களும் அதே ஆத்மார்த்தமான உணர்வுடன் பார்த்து செல்கின்றனர்.

இந்த நகரமானது மாபெரும் விழாக்காலம் பூண்டு காணப்பட, கிருஸ்துமஸ் திருவிழாவானது ரஜௌரி தோட்டத்தில் சிறப்பாக அரங்கேற, இங்கே விதவிதமான கலாச்சாரம், பாரம்பரியம், உணவு, இசை, என பலவற்றையும் நம்மால் காண முடிய, முற்றிலும் பொழுதுப்போக்கும் விதமாக நமக்கு இது அமைகிறது. பழைய தில்லியும் இதே போல், எண்ணற்ற சந்தைகளைக்கொண்டு, கிருஸ்துமஸ் அலங்கார பொருட்களை நியாயமான விலைக்கு நண்பனாக விற்கிறது.

PC: freestocks.org

கொல்கத்தா:

கொல்கத்தா:


கிருஸ்துமஸ் கொண்டாட்டம் என வரும்போது யாருமே வேறுப்பக்கம் இங்கே திரும்பி பார்த்து கல் எறிவதில்லை. நேரத்தை பொன்னான நேரமாக மாற்றும் புதிய சந்தை, பலவிதமான அலங்காரத்தையும், இனிப்புகளையும் கொண்டு காணப்படுகிறது. புதிய சந்தையில் நாம் ஷாப்பிங்க் செய்ய, நஹௌம் மற்றும் சண்ஸில் நிற்காமல் நம் ஷாப்பிங்கானது முழுமையடைவதில்லை என தெரியவர, பழமையான ஜெவிஷ் பேக்கரி இந்த நகரத்தில் புகழ்பெற்று விளங்குவதோடு, அதீதமான பழக்கேக்குகளையும் கொண்டிருக்கிறது.

கொண்டாட்டத்தின் நகரமான கிருஸ்துமஸினால் பெருமளவில் கூட்டமானது பார்க் தெருவில் காணப்பட, அங்கிருந்து கூட்டமானது அலேன் பூங்கா நோக்கியும் செல்ல, கிருஸ்துமஸ் திருவிழா மற்றும் ஷாப்பிங்கின் மையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

PC: Petr Kratochvil

Read more about: travel shopping

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்